பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும் ப்ரைடு சிக்கன்… இனி நம் வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க! ரெசிபி இதோ…

சிக்கன் வைத்து வீட்டில் பலவிதமான ரெசிபிகள் காரசாரமான சுவையில் செய்திருந்தாலும் கடைகளில் கிடைக்கும் பிரைட் சிக்கனுக்கு தனி மவுஸ் தான். மாலை நேரங்களில் தெருவே மணக்கும் வாசத்தில் ரோட்டு கடைகளில் துவங்கி பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கும் ப்ரைட் சிக்கனுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சுவையின் அட்டகாசமாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இருக்கும் இந்த ப்ரைடு சிக்கன் நம் வீட்டில் அதே சுவையில் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும்.. வாங்க ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரைடு சிக்கன் செய்வதற்கான ரெசிபி இதோ…

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஏழு சாய்ந்த வத்தல், ஐந்து முதல் 10 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மையாக அரைக்க வேண்டும். இந்த விழுதுகள் தயார் செய்யும் பொழுது சாய்ந்த வத்தலை குறைந்தது அரை மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து அதன் பின்பு மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த விழுதுகளை முக்கால் பாகம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நன்கு கழிவி சுத்தம் செய்து வைத்திருக்கும் 500 கிராம் சிக்கனில் நாம் அரைத்த விழுதுகளை சேர்க்க கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி கான்பிளவர் மாவு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் தேவையான அளவு உப்பு கலந்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த மசாலா கலவை முதலில் பார்ப்பதற்கு சிக்கனில் ஒட்டாத போல் தோன்றினாலும் பத்து நிமிடங்கள் ஊறவைக்கும் பொழுது அதில் நன்கு காரசாரம் பிடித்து விடும். 10 முதல் 15 நிமிடம் சிக்கனை அப்படியே ஊற வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி அதுவும் வீட்டிலேயே… தித்திப்பான கேரட் ஜெல்லி செய்வதற்கான ரெசிபி இதோ…

15 நிமிடம் கழித்து சிக்கனை பிரெட் கிராம்ஸ் மீது திரட்டி எடுத்து தனியாக ஒரு தட்டில் பிரித்து வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் மிதமான தீயில் சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சிக்கனை ஒன்று ஒன்றாக சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பிரைட் சிக்கன் தயார்.