ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் ஜாப்பனீஸ் பிளாப்பி ஆம்லெட்! ரெசிபி இதோ..

பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளின் மட்டுமே சில வகையான உணவுகள் எப்போதும் பிரசித்தி பெற்றதாக இருக்கும். இந்த முறை ஜப்பனீஸ்களின் மிகவும் பிரபலம் அடைந்த பிளாப்பி ஆம்லெட் ரெசிபி நம் வீட்டில் எளிமையான முறையில் நொடியில் தயார் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்று முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் வெள்ளை கருவை ஒரு பாத்திரத்திலும் மஞ்சள் கருவை ஒரு பாத்திரத்தில் தனித்தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளை கருவை முதலில் நன்கு அடித்து எடுத்துக் கொள்ளலாம். முட்டையை நன்கு அடித்து வெள்ளையாக நுரைத்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து தொடர்ந்து முட்டையை அடித்துக் கொள்ள வேண்டும். முட்டை நன்கு கெட்டியாக வெள்ளை ஆன மாவு பதத்திற்கு வந்து விடும்.

அடுத்ததாக மஞ்சள் கருவை தனியாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடு படுத்தி கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்காத பட்டர் சேர்த்து கொள்ளலாம். அடுத்து அதில் நம் தனியாக எடுத்து வைத்திருக்கும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாராளமாக புரோட்டின் சத்து நிறைந்த சுண்டல் சூப் குழம்பு! ரெசிபி இதோ….

அதை தொடர்ந்து முட்டையின் வெள்ளை கருவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து முட்டையின் மேல் பக்கத்தில் ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிளக்ஸ், ஒரு தேக்கரண்டி ஆர்கனோ சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது சுவையான மற்றும் ஹெல்தியான ஜாப்பனீஸ் ஆம்லெட் தயார். எப்போதும் முட்டை வைத்து ஒரே மாதிரியாக செய்யாமல் இது போன்ற வித்தியாசமான ரெசிபிகள் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம்.