பள்ளி மற்றும் கல்லூரி முடித்து வரும் குழந்தைகள் வீடு திரும்பும் பொழுது மாலை நேரங்களில் டீ மற்றும் காப்பியுடன் தனக்கு பிடித்தமான நொறுக்கு தீனிகளை சாப்பிட ஆசையாக இருப்பார்கள். அப்படி அவர்கள் சாப்பிடும் ஸ்னாக்ஸ் சுவையானதாக மட்டும் இருந்தால் போதாது ஹெல்த்தியானதாகவும் இருக்க வேண்டும். அப்படி சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகள் செய்து கொடுக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து நிறைந்த செவ்வாழைப்பழம் வைத்து அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு செவ்வாழை பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, இரண்டு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை, தேவையான அளவு பால் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டுச் சர்க்கரை தங்கள் சுவைக்கேற்ப கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து நன்கு கட்டிகள் விழாக வண்ணம் பிசைந்து கொள்ள வேண்டும். இதனுடன் தேவைப்பட்டால் அரைக்கப் ராகி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது இந்த மாவு பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக வரவேண்டும். அதன் பின் இந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்து எடுத்து உருண்டை உருட்டி கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும்.
அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் உடைத்த முந்திரி பருப்பு 10, காய்ந்த திராட்சை 10 சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக இதில் கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து நெய்யோடு பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளலாம். இறுதியாக இதன் மேல் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.
சாதம், தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் அட்டகாசமாக பொருந்தும் விதத்தில் காரசாரமான காளான் முட்டை கிரேவி!
இப்பொழுது நாம் வேக வைத்திருக்கும் உருண்டைகளை கடாயில் சேர்த்து தேங்காய் ஓடு நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடலாம். இதை சரியா பாத்திரத்தில் மாற்றி குழந்தைகளுக்கு சாப்பிட பரிமாறலாம். மாலை நேரங்களில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு அதிகப்படியாக எண்ணெய் பலகாரங்கள் கொடுக்காமல் இது போன்ற ஆவியில் வேகவைத்த ஸ்நாக்ஸ் வகைகள் கொடுக்கும் பொழுது எளிதில் செரிமானமாகி உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கிறது.