இதமான சாரல் மழைக்கு மாலை நேரங்களில் டீ, காபியுடன் காரசாரமாக சாப்பிட ஆசையா? ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க…

மாலை நேரங்களில் இதமான சாரல் மழை வரும்பொழுது நம்மில் பலருக்கு ரோட்டுக்கடை காளான் மசாலா, கோபி மஞ்சூரியன், பஜ்ஜி, வடை என சாப்பிட தோன்றும். அந்த நேரங்களில் டீ காபியுடன் ஒரு முறை இந்த உருளைக்கிழங்கு மஞ்சுரியன் செய்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த மஞ்சூரியன் மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். உருளைக்கிழங்கு மஞ்சுரியன் எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபி இதோ….

மஞ்சூரியன் செய்வதற்கு முதலில் இரண்டு உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த உருளைக்கிழங்கை நன்குட்டு திருவலையில் வைத்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் கார்ன்ஃப்ளார் மாவு, அரை கப் பிரட் கிரம்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

தண்ணீர் சேர்க்காமல் தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். இப்பொழுது மாவு தயாராக மாறி உள்ளது. இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நல்ல எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் மிகப் சிறியதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய கேரட், நீளவாக்கில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் மசாலா தூள் களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி டொமட்டோ சாஸ், ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் இறுதியாக ஒரு தேக்கரண்டி காம்ப்ளார் மாவை நன்கு தண்ணீரில் கரைத்து அந்த கலவையை கடாயில் சேர்த்து கிளற வேண்டும்.

வீட்டு இட்லி புசுபுசுன்னு பஞ்சு மாதிரி மிருதுவாக இருக்க ஹோட்டலின் ரகசிய டிப்ஸ்!
இப்பொழுது மஞ்சூரியனுக்கு தேவையான குழம்பு மசாலா தயாராக மாறி உள்ளது. இந்த மசாலா நன்கு கொதிக்கும் பொழுது நாம் பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார்.

இந்த மஞ்சூரியனை பரிமாறுவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

Exit mobile version