வீட்டு இட்லி புசுபுசுன்னு பஞ்சு மாதிரி மிருதுவாக இருக்க ஹோட்டலின் ரகசிய டிப்ஸ்!

வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் பலவிதமான ரெசிபிகள் செய்து அனைவரையும் திருப்தி படுத்தினாலும் இட்லி என வரும் பொழுது சில நேரங்களில் தடுமாறுவது வழக்கம்தான். வீட்டில் செய்யும் இட்லி கடை இட்லியை போல மிருதுவாக இல்லை என்பது பலரின் கேள்வி. கடை இட்லியை போல புசுபுசுன்னு பஞ்சி மாதிரி இட்லி சாப்பிட வேண்டும் என்பது வீட்டில் உள்ள அனைவர்களின் விருப்பம். ஹோட்டல் பக்குவத்தில் நாமும் மாவு தயார் செய்வதற்கான எளிமையான டிப்ஸ்கள் இதோ.. இனி பஞ்சு மாதிரி இட்லி நம் வீட்டில் தினம் தோறும் தயார் செய்யலாம் வாங்க…

முதலில் இட்லிக்கு மாவு தயார் செய்யும் பொழுது அளவு முக்கியம்.. நான்கு டம்ளர் அளவு இட்லி அரிசி எடுத்துக் கொண்டால் அதில் ஒரு டம்ளர் அளவிற்கு உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நான்கு டம்ளர் இட்லி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து நான்கு முதல் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு டம்ளர் உளுந்துடன் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கழுவி சுத்தம் செய்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இப்படி தனித்தனியாக ஊற வைத்திருக்கும் இட்லி மற்றும் அரிசியை தனித்தனியாக அரைத்து எடுக்க வேண்டும். அரைத்த இட்லி மாவு மற்றும் அரிசி மாவை ஒன்றாக கலந்து குறைந்தது ஆறு முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதன்பின் இந்த மாவை நன்கு கலந்து கொடுத்து இட்லி மற்றும் தோசை தயார் செய்தால் மிருதுவாகவும் பஞ்சு போல சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.

மேலும் இட்லிக்கு மாவு தயார் செய்யும் பொழுது அரிசி மற்றும் உளுந்துடன் மூன்று தேக்கரண்டி அவல் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அதாவது மூன்று தேக்கரண்டி அவலை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அந்த அவலை அரிசியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அதன் பின் அரிசி மாவுடன் இந்த உளுந்து மாவு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மூன்று தேக்கரண்டி இட்லி சுவையாவை இரண்டு மணி நேரம் தண்ணீருடன் ஊற வைத்து நாம் உளுந்து இருக்கு மாவு ஆட்டும் பொழுது அதனுடன் சேர்த்து அரைத்து அரிசி மாவுடன் கலந்து இட்லி மாவு தயார் செய்யலாம். இதுவும் இட்லி மிருதுவாக வருவதற்கு ஒரு ரகசியம்.

ஒரு கிலோ அளவிற்கு இட்லி மாவு தயார் செய்யும் பொழுது மூன்று ஆமணக்கு விதையை நன்கு ஊற வைத்து உளுந்து அரைக்கும் பொழுது சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இட்லி பார்ப்பதற்கு பஞ்சு போல மிருதுவாக வரும்.

இட்லி ஜவ்வரிசியை நாம் மாவு அரைக்கும் பொழுது உடன் சேர்த்து அரைக்கும் பொழுது இட்லி மிருதுவாக வரும். அதாவது 4 டம்ளர் அரிசி, ஒரு டம்ளர் உளுந்து சேர்க்கும் பொழுது அரை டம்ளர் இட்லி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து உளுந்துடன் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்தி மாவு அரைக்கும் பொழுது நாம் அரைக்கும் கிரைண்டர் சூட்டினால் மாவு சூடாவதை தடுக்க முடியும் அல்லது இட்லிக்காக உளுந்து மற்றும் அரிசி ஊற வைக்கும் பொழுது தண்ணீர் கலந்து அதை ஃப்ரிட்ஜில் 5 மணி நேரம் வைத்து விட்டு அதன் பின் மாவு அரைக்கும் பொழுது கிரேட்டர் சூடாகாமல் மாவு அரைத்து எடுக்கலாம்.

Exit mobile version