இதில் கூட சாதம் செய்யலாமா! வாயை பிளக்க வைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த எள்ளு சாதம் ரெசிபி!

கால்சியம் சத்து நிறைந்த கருப்பு எள் எலும்புகளுக்கு ஊட்டச்சத்து அளித்து உறுதிப்படுத்துவதுடன் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து உடல் ஆரோக்கியத்தின் மேம்படுத்துகிறது. செரிமானத்தை அதிகப்படுத்தி தோல் நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இத்தனை மருத்துவ குணம் நிறைந்த கருப்பு எள் இதுவரை இட்லி பொடி தயார் செய்யும் போது மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்ட வந்த நிலையில் இன்று இந்த எள் வைத்து அருமையான சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

ஒரு அகலமான கடாயில் காரத்திற்கு ஏற்ப 6 காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், , இரண்டு பல் வெள்ளை பூண்டு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இரண்டு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் வருத்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதை கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு கைப்பிடி அளவு வேர்கடலை, நான்கு காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை, அரைத்து கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

சிக்கன் பிரியாணி உடன் போட்டி போடும் சுவையில் பாரம்பரியமிக்க மண் சட்டி கறிசோறு!

தாளிப்பு தயாரான பிறகு அடுப்பை அணைத்து அந்த கடாயில் நமக்கு தேவையான சாதத்தை சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் நாம் வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு தேவையான அளவு உப்பு கலந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான எள்ளு சாதம் தயார்.

இந்த சாதம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து விடலாம். ஊட்டச்சத்து நிறைந்த இந்த எள்ளு சாதம் குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக எலும்பு நன்கு வளர்ச்சி அடைந்து உறுதியாக இருக்க உதவும்.