தற்போதைய காலங்களில் சட்டி சோறு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் கருவாடு சட்டி சோறு, மீன் குழம்பு சட்டி சோறு அனைவரிடமும் மிகவும் பிரசித்தி பெற்றதாக சுவை மிக்கதாகவும் மாறி வருகிறது. இந்த நேரத்தில் முட்டை பிரியர்களுக்கு அதை சுவையில் முட்டை வைத்து அருமையான சட்டி சோறு நம் வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம் வாங்க.
இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு கப் சாதம் போதுமானது. நான்கு முட்டை எடுத்து தண்ணீரில் வேக வைத்து கொள்ள வேண்டும். குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை நன்கு வேக வைத்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு அதன் தோள்கள் நீக்கி சுத்தம் செய்து வெள்ளை கருவை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
தனியாக பிரித்த வெள்ளை கருவை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி கடலெண்ணெய் சேர்த்து நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெள்ளை கருவை கடாயில் சேர்த்து பொறிக்க வேண்டும்.
இதனுடைய ஒரு சிறிய துண்டு இஞ்சி நன்கு துருவி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய வெங்காயம், இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் வதங்கி வரும் நேரத்தில் கைப்பிடி அளவு கறிவேப்பிலை, பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு மசிந்த பிறகு மீதம் இருக்கும் ஒரு கப் சாதத்தை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புரோட்டின் சட்னி செய்ய ஆசையா? வாங்க இந்த ரெசிபி உங்களுக்கு தான்!
கடாயில் சாதம் சேர்த்து கிளறும் பொழுது முதலில் நாம் தனியாக எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் கருவை பொடிமாஸ் செய்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் உப்பு சரிபார்த்து கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் முட்டை சட்டி சோறு தயார். நல்ல காரசாரமான இந்த முட்டை சட்டி சோறு மழைக்காலங்களில் ஏற்ற உணவாக இருக்கும். சளி, இருமல் போன்ற தொல்லை இருக்கும்பொழுது கூடுதலாக மிளகு சீரகத்தூள் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.