ஐந்து நிமிடம் போதும்… முறுமுறு ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்! வாங்க ஹெல்த்தியான முட்டை பக்கோடா செய்வதற்கான ரெசிபி…

மாலை நேரங்களில் டீ மற்றும் காப்பியுடன் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அதற்காக எப்பவும் கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா என வாங்குவதை வழக்கமாக வைக்காமல் வீட்டிலேயே சில ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய முட்டை பக்கோடா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். கடலை மாவு சேர்த்த பிறகு மாவு தயார் செய்யும் பொழுது கட்டிகள் விழாத வண்ணம் தண்ணியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி பேக்கிங் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது எக் பக்கோடா செய்வதற்கு மாவு தயாராக உள்ளது. ஒரு அகலமான கடாயில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து சூடானது நாம் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை சிறுசிறு குமிழ்களாக ஊற்றிக் கொள்ள வேண்டும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

கோதுமை மாவு வைத்து சப்பாத்தி மற்றும் பூரி இதைத் தாண்டி பாஸ்தா செய்யலாம் வாங்க!

இப்படி முழு மாவையும் பொறித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொறித்த முட்டையின் மேல் இரண்டு சிட்டிகை தனி மிளகாய் தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி தூவி நன்கு ஒரு முறை கலந்து சாப்பிட பரிமாறினால் சுவையான முட்டை பக்கோடா தயார்.