கேரளா ஸ்பெஷல் சிவக்க சிவக்க காரம்சற்று குறைவான முட்டை சம்பல்! ரெசிபி இதோ…

முட்டை வைத்து எவ்வளவு ரெசிபி செய்தாலும் அடுத்தடுத்து புதுவிதமான ரெசிபிகள் செய்து கொண்டே இருக்கலாம். இந்த முறை பார்ப்பதற்கு சிவக்க சிவப்ப கண்களை பறிக்கும் விதத்தில் இருக்கும் முட்டை சம்பல் காரம் குறைவாக எளிமையான முறையில் வீட்டிலேயே செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

இந்த முட்டை சம்பல் பார்ப்பதற்கு சிவக்க சிவப்ப காரம் கூடுதலாக தெரிந்தாலும் காரம் சற்று குறைவாகவே இருக்கும். அதற்காக காஷ்மீரின் மிளகாய் மட்டுமே இதில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முதலில் பத்து முதல் 15 காஷ்மீரி மிளகாய் விதைகளை நீக்கி கொதிக்கும் வெந்நீரில் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்தது 10 முதல் 15 நிமிடம் மிளகாய் நன்கு ஊரியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக 10 முதல் 15 சின்ன வெங்காயம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய், இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் அரைத்து எடுத்து இருக்கும் பொழுதுகளை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் பதப்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் சுவைக்காக மற்ற ரெசிபிகளிலும் பயன்படுத்தலாம். இப்பொழுது ஐந்து முதல் ஆறு முட்டைகளை தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.

மிதமான தீயில் எட்டு நிமிடம் முட்டைகள் வெந்ததும் குளிர்வித்து அதன் தோல் பகுதிகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளலாம். இப்பொழுது முட்டையின் நடுவே இரண்டு மூன்று கீறல்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் முட்டைகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

தஞ்சாவூர் ஸ்பெஷல் உரப்பு அடை! பாரம்பரிய விளக்கத்துடன் கூடிய ரெசிபி இதோ!

இப்பொழுது பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதுவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் கூடுதலாக தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது மசாலா கெட்டி பதத்திற்கு வந்ததும் நாம் பொறித்து வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான முட்டை பச்சடி தயார்.