10 நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஆப்தானி எக் மசாலா! அட்டகாசமான ரெசிபி இதோ…

முட்டை வைத்து ரெஸ்டாரண்ட் சுவையில் சமைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஆப்கானி எக் மசாலா செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், கைப்பிடி அளவு முந்திரி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

அடுத்ததாக வதக்கிய பொருளை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு தேவையான அளவு முட்டைகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், இதனுடன் நாம் வேக வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து ஒரு நிமிடம் கழித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை சிறிய துண்டு, கிராம்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நாம் அரைத்த விழுதுகள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு மசாலா பொருட்களை கலந்து கொள்ளலாம்.

மீதமான சாதம் வைத்து தோசை மற்றும் தேங்காய் பொடி! ரெசிபி இதோ….

அதற்காக ஒரு தேக்கரண்டி மிளகு சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து பச்சை வாசனை செல்லும் வரை கொதிக்க விட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நான்கு கப் தயிரை நன்கு கலந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர் சேர்த்த ஒரு நிமிடம் கழித்து வேகவைத்த முட்டை, கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி, பிரஸ் கிரீம் சேர்த்து கலந்து கொடுத்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான ஆப்கானி ஸ்டைல் எக் மசாலா தயார்.