முட்டை வைத்து பத்தே நிமிடத்தில் அட்டகாசமான கோபி மஞ்சூரியன்! ரெசிபி இதோ….

முட்டை வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்திருந்தாலும் தினம் புதிதாக செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த கோபி மஞ்சூரியன் ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அதே நிமிடத்தில் தயாராகும் இந்த கோபி மஞ்சூரியன் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றாகவும் இருக்கும். வாங்க எளிமையான முறையில் முட்டை கோபி மஞ்சூரியன் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் நான்கு முட்டைகளை 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை சுத்தம் செய்து ஒரு தட்டிற்கு மாற்றிவிடலாம். நான்கு முட்டையில் மஞ்சள் கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை கருவை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மற்றொரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் நான்கு முட்டைக்கு 100 கிராம் வீதம் கடலை மாவு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து முதலில் நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதில் தேவையான அளவு உப்பு, கூடுதலாக ஒரு முட்டை சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

கிராமத்து பக்குவத்தில் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு! பக்குவமான ரெசிபி இதோ…

அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சிக்கன் மசாலா, இரண்டு தேக்கரண்டி தக்காளி சாஸ் சிறிதளவு தண்ணீர் கலந்து மசாலாவை கொதிக்க விட வேண்டும். மசாலா கொதித்து வரும் நேரத்தில் நாம் பொரித்து வைத்திருக்கும் முட்டை பக்கோடாவை இதில் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டை கோபி மஞ்சூரியன் தயார்.