முட்டை வைத்து விதவிதமான பல ரெசிபிகள் செய்தாலும் அடுத்தடுத்து புதிய ரெசிபிகள் வந்து கொண்டே தான் இருக்கும். அந்த அளவிற்கு முட்டை அனைவருக்கும் பிடித்தமான மற்றும் எளிதில் சமைக்கக்கூடிய உணவில் ஒன்று. இந்த முறை முட்டை உடைத்து குழம்பு செய்யாமல் புதிதாக முட்டை உடைத்து பிரியாணி செய்யலாம் வாங்க.. உடைத்து விட்ட முட்டை பிரியாணி பார்க்கலாம் செய்வதற்கான ரெசிபி விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியில் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி குறைந்தது அரைமணி நேரம் ஆவது ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பிரியாணி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். இதில் ஒரு அன்னாச்சி பூ, ஒரு சிறிய துண்டு பட்டை, மூன்று ஏலக்காய், ஒரு சிறிய துண்டு ஜாதிபத்திரி, மூன்று துண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, சிறிதளவு கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நீளவாக்கில் கொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக நிறம் மாறியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை விளக்கிக் கொள்ளலாம்.
அடுத்தது இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்த பிறகு ஒரு நிமிடம் வதக்கினால் போதுமானது. இதை அடுத்து இரண்டு பெரிய தக்காளி பழங்கள் பொடியாக நறுக்கி குக்கரின் சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் ஒரு கப் கெட்டி தயிர், அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு தொக்கு பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதில் கூட சாதம் செய்யலாமா! வாயை பிளக்க வைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த எள்ளு சாதம் ரெசிபி!
இதனுடன் நாம் வேகவைத்த மூன்று முட்டைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கப் அரிசிக்கு ஒரு டம்ளர் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கூடுதலாக இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும்.
மிதமான தீயில் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான உடைத்து விட்ட முட்டை பிரியாணி தயார்