சிக்கன் வைத்து பல ரெசிபிகள் செய்தாலும் பார்த்த உடனே சாப்பிட தூண்டும் தாவுத் சிக்கன்!

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மீது தனி விருப்பம் தான். இடத்திற்கு ஏற்றார் போல் சிக்கன் வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக சிக்கன் இருந்தாலும் அதில் சேர்க்கப்படும் மசாலாக்களை பொருத்து அதன் சுவையும், மனமும் சற்று தூக்கலாக அமையும். அந்த வகையில் இன்று தாவுத் ஸ்டைல் சிக்கன் ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ…

தாவூத் ஸ்டைல் சிக்கன் செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி தனியா, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்தெடுக்க வேண்டும். மெய்யாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டால் போதுமானது.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கிலோ சிக்கனை மஞ்சள் உப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி சீரகப்பொடி, அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையில் இறுதியாக அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளலாம். இப்பொழுது நம் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை இதனுடன் சேர்த்து மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.

இந்த கலவையை குறைந்தது ஒரு அரை மணி நேரம் அப்படியே ஓரமாக வைத்துவிடலாம். மசாலாக்கள் அனைத்தும் சிக்கனில் ஒருசேர கலந்து இருக்கும்படி அப்படியே வைத்து விட வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் நம் ஊறவைத்து வைத்திருக்கும் சிக்கனை அது சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்கு வெண்ணையோடு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் இந்த சிக்கனை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளவும்.

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மிருதுவான பால் கொழுக்கட்டை!

அதனுடன் இரண்டாகிய மூன்று பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மீண்டும் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அடுத்து பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடலாம்.
இறுதியாக அரை தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினார் சுவையான தாவூத் ஸ்டைல் சிக்கன் தயார். இந்த சிக்கனை பிரியாணி, புலாவ் , சூடான சாதம் என அனைத்திற்கு வைத்து சாப்பிடும் பொழுதும் சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version