சாதாரண சமையலை அசத்தல் சமையலாக மாற்றும் எளிமையான சமையல் டிப்ஸ்கள் இதோ…

சமையல் கடினமான வேலையாக இருந்தாலும் சில எளிமையான டிப்ஸ்களை பயன்படுத்தி சமைக்கும் பொழுது நொடியில் அற்புதமான சமையலை உருவாக்கிட முடியும். மேலும் அதை சுவைக்கும் பொழுதும் திருப்தியாகவும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் விதத்திலும் இருக்கும். வாங்க கடினமான சமையலையும் எளிமையாக மாற்றும் சமையலறை டிப்ஸ்கள் இதோ.

சமையலின் போது தேங்காய் மீதமாகிவிட்டால் அதை லேசாக வதக்கி சிறிதளவு உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

அடை செய்யும் பொழுது காய்கறிகளுடன் கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து தடை செய்தால் சத்து நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கும்.

வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூவை நறுக்கிய மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காமல் நிறம் அப்படியே வெண்மையாகவே இருக்கும்.

பருப்பு பொடி செய்வதற்கு துவரம் பருப்பிற்கு பதிலாக பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய், பூண்டு வர மிளகாய் சேர்த்து பருப்பு பொடி தயார் செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.

சிக்கன் மற்றும் மட்டன் வைத்து வறுவல் செய்யும் பொழுது மசாலாவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து வறுவல் செய்தால் மசாலா உதிராமல் சுவையாக இருக்கும்.

காரப்பலகாரங்கள் செய்யும் பொழுது கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பலகாரம் செய்தால் ருசியாக இருக்கும். மேலும் அதை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

கட்லெட் செய்யும் பொழுது எண்ணெயில் போட்டதும் அது பிரிந்து செல்லாமல் இருக்க கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து பிரட் துகள்களை தண்ணீரில் நனைத்து கட்லெட் செய்யும் பொழுது கலவை இறுக்கமாகவும் சுவையாகவும் இருக்கும்.

ரவா உப்புமா செய்யும் பொழுது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்தி செய்தால் சுவை சற்று கூடுதலாகவே இருக்கும்.

கடையில் வாங்குவது போல மொறு மொறு பிரெஞ்சு ப்ரைஸ்! வீட்டில் செய்யலாம் வாங்க…

அவியலுக்கு தேங்காய் மசாலா தயார் செய்யும் பொழுது தேங்காய், பச்சை மிளகாய், , சீரகம் இதோடு ஊற வைத்த கசகசா சேர்த்து அரைத்து தேங்காய் மசாலா தயார் சமைத்தால் அவியல் சுவையாக இருக்கும்.

டீ போட்டுவிட்டு மீதம் இருக்கும் தேயிலை சக்கையை கொண்டு என்னை பாத்திரங்கள் துலக்கினால் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் பாத்திரம் பளபளப்பன இருக்கும்.

உருளைக்கிழங்கு மசித்து செய்யும் பலகாரங்களில் சிறிதளவு ஓமம் சேர்த்து செய்தால் நல்ல மனமாக இருக்கும் மேலும் வாய்வுத் தொல்லையும் இருக்காது.