மணிக் கணக்காக சமையலறையில் நேரத்தை வீணடிக்காமல் சில நொடிகளில் அசத்தலாக சமைக்க வேண்டுமா? சமையலறை டிப்ஸ்கள் இதோ!

சமையல் என்பது எளிமையான விஷயமாக தெரிந்தாலும் அடுத்தவருக்கு பிடித்தமான முறையில் சமைக்க வேண்டும் என பார்க்கும் பொழுது கடினமான விஷயமாக ஆகிவிடும். நம் சமைக்கும் உணவு அடுத்தவர்களின் மனதையும், வயிறையும் திருப்தி படுத்தும் விதத்தில் சமைக்க வேண்டியது அனைவரின் விருப்பம். அந்த வகையில் மணிக்கணக்காக பல மணி நேரம் சமையலறையில் செலவிட்டு சமைப்பதை விட எளிமையான முறையில் அற்புதமாக சமைப்பதற்கான சமையலறை டிப்ஸ்கள் இதோ…..

முருங்கை கீரை, அகத்திக்கீரை வதக்கும் பொழுது நாம் கரண்டியில் நுனிப்பகுதியை வைத்து கிளறி கொடுத்து வதக்கினால் கீரை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருக்கும்.

நாம் தோசை சுடும் நேரங்களில் சில சமயங்களில் கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு வராத பொழுது தோசை கரண்டியை தண்ணீரில் நனைத்து விட்டு தோசையில் எடுத்தால் எடுப்பதற்கு எளிமையாக வந்து விடும்.
அவியல் செய்யும் பொழுது தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் இவற்றோடு சிறிதளவு கசகசாவையும் சேர்த்து அரைத்து நாம் அவியல் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

மிளகாய் வெற்றிலை மிக்ஸியில் அரைக்கும் பொழுது சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் வற்றல் நன்றாக பொடித்து விடும். சீக்கிரமாக கெட்டுப் போகாமலும் இருக்கும்.

முட்டை அவிக்கும் பாத்திரத்தில் சோறு வடித்த வடிக்கஞ்சி தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் கழித்து அந்த பாத்திரத்தில் கழுவினால் முட்டை வாடை வீக்காது.

பொங்கல் செய்யும் பொழுது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிதளவு வறுத்த ரவையை சேர்த்தால் பொங்கல் கெட்டியாக மாறிவிடும்.

காலையில் பால் சுட வைத்ததும் இரண்டு நெல்மணிகளை பாலின் உள் போட்டு வைத்தால் அந்த பால் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

பூண்டு உரிப்பதற்கு முன் அந்த பூண்டை பத்து நிமிடம் வெயிலில் காய வைத்து விட்டு பின்னர் உரித்தால் எளிமையாக உரிக்க முடியும்.

கொத்தமல்லி, புதினா இலைகளை வைத்து துவையல் செய்யும் பொழுது தண்ணீருக்கு பதிலாக தயிர் சேர்த்து அரைத்தால் சிறிது புளிப்பு சுவையுடன் துவையல் அருமையாக இருக்கும்.

புற்றுநோய் நோய் வருவதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய் வைத்து அருமையான சாதம் ரெசிபி!

டீ போடும்போது பாத்திரத்தில் டீத்தூளுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து போட்டால் டீக்கரை பாத்திரத்தில் அடியில் படியாது. கழுவுவதற்கு எளிமையாக இருக்கும்.

ஆட்டுக்குடல் கறி வைக்கும் பொழுது குடலோடு சேர்த்து தேங்காய் ஓடு போட்டு வேக வைத்தால் குடல் நன்றாக வெந்துவிடும்.

மிளகாய் பஜ்ஜி செய்யும் பொழுது பஜ்ஜி மிளகாவை இரண்டு நிமிடம் சூடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் அந்த மிளகாய் வைத்து பச்சை செய்யும் பொழுது மிளகாய் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.