90ஸ் கிட்ஸ்களுக்கு மிகப் பிடித்தமான இனிப்பு பலகாரம்! தேங்காய் பர்பி செய்வதற்கான ரெசிபி!

தேங்காய் பர்பி என்று சொன்னவுடன் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு இந்த தேங்காய் பர்பிக்கு பல ரசிகர் கூட்டம் உள்ளது. விசேஷ நாட்களில் மட்டுமல்லாமல் வீட்டில் இனிப்பு சாப்பிட தோன்றும் நேரங்களில் நாம் இந்த தேங்காய் பர்பியை எளிமையான முறையில் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்விக்கலாம் வாங்க…

இந்த தேங்காய் பர்பி செய்வதற்கு துருவிய தேங்காய், பால், அச்சு வெல்லம், ஏலக்காய் தூள் என நான்கு பொருட்கள் மட்டுமே போதுமானது..

ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் பால் கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்ததும் இரண்டு கப் பாலிற்கு மூன்று கப் தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும். இரண்டு கப் பால் 3 கப் தேங்காய் துருவல் என்பது அளவு.

அதற்கு ஏற்ப கால் நன்கு கொதித்ததும் மூன்று கப் தேங்காய் துருவலை கொதிக்கும் பாலுடன் சேர்த்து கலர வேண்டும். குறிப்பாக தேங்காய் பர்பி செய்யும் பொழுது புதிய தேங்காய்களை பயன்படுத்தி செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

புதிய தேங்காய்களை உடைத்து அதை மென்மையாக துருவி எடுத்து அதில் நாம் பார்பி செய்யும் பொழுது மிகவும் தித்திப்பாக இருக்கும். அந்த வகையில் பால் நன்கு கொதித்ததும் மூன்று கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பால் நன்கு கொதித்து தேங்காய் துருவல் அதில் நன்கு வெந்து வரவேண்டும். பால் நன்கு வற்றிவரும் நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும். பால் முழுவதுமாக வற்றி நேரத்தில் ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து அரைத்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!

சர்க்கரை தேங்காய் பூவுடன் சேர்த்து நன்கு கரையும் விதத்தில் நாம் கலந்து கொடுக்க வேண்டும். இறுதியாக இந்த கலவை நன்கு கெட்டியாக வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து இறுக்கிக் கொள்ள வேண்டும். குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் இந்த கலவையை நன்கு ஆறவிட வேண்டும்.

ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி இதை ஆற வைத்துக் கொள்ளலாம். அதன் பின் இதை சமமான அளவு பரப்பி நமக்கு விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான தேங்காய் பர்பி தயார். இந்த பர்பி செய்வதற்கு நாம் தேங்காயை நெய்யுடன் வறுத்து சேர்த்தாலும் சுவை கூடுதலாக இருக்கும். மேலும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Exit mobile version