எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என்றால் பலரின் விருப்பமான குழம்பு வகைகளில் ஒன்றாக இருக்கும். அதிலும் மசாலாக்களை கடையில் வாங்காமல் வீட்டிலேயே வறுத்து அரைத்து தயார் செய்யும் பொழுது அந்த குழம்பு மேலும் வாசனையாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும். கிராமத்து ஸ்டைல் வறுத்து அரைத்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….
இந்த குழம்பு செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி மல்லி, காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி வெள்ளை எள், ஒன்றரை தேக்கரண்டி வேர்க்கடலை, கைப்பிடி அளவு கருவேப்பிலை இவற்றை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆரம்பிக்க வேண்டும். அதன் பின் வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரிற்கு மாற்றிக் கொள்ளலாம். அதனுடன் கூடுதலாக ஒரு கப் துருவிய தேங்காய் நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்றை பொடியாக நறுக்கி சேர்த்து அரைக்க வேண்டும். மசாலாக்களை மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கத்திரிக்காயை நான்கு புறம் கீரி சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். கத்திரிக்காயை பொரித்தெடுக்க நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது சிறிதளவு நெய் பயன்படுத்தினால் சுவையும் மனமும் வாசனையாக இருக்கும்.
கத்திரிக்காய் பொன்னிறமாக வறுபட்டதும் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிவிடலாம். மீதம் இருக்கும் அதே எண்ணெயில் ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
காரசாரமான நல்லாம்பட்டி ஸ்பெஷல் சோயா வறுவல்!
சின்ன வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் 10 முதல் 15 வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலாக்களின் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து உப்பு சரிபார்க்க வேண்டும்.
இந்த தருணத்தில் உப்பு தேவைப்பட்டால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து கலந்து கொடுத்து மூடி போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இடையில் 10 நிமிடங்கள் கழித்து நாம் எண்ணெயில் வறுத்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் தற்பொழுது குழம்பு தயாராக மாறிவிட்டது. சூடான சாதத்துடன் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.