இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் சிறிது நாட்களில் வரவுள்ளது. அதைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாக்களின் ஹீரோவான கேக் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று. இந்த முறை வீட்டில் ஓவன் இல்லாமல் எளிமையாக தேங்காய் செய்து அசத்த விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க அருமையான தேங்காய் கேக் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் கப் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கால் கப் தேங்காய் பால், காய்ச்சிய பசும்பால் கால் கப், ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ், கால் கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து முதலில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இதில் ஒரு கப் நன்கு பொடி செய்த வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சேர்த்த பிறகு நன்கு ஒரு சேர கிளற வேண்டும். இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு பொருட்கள் சேர்க்கும் போது மட்டுமே வாசனை சற்று கூடுதலாகவே இருக்கும்.
அடுத்ததாக இந்த பாத்திரத்தில் ஒன்று மற்றும் கால் கப் மைதாவை சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக அரை கப் டெசிகேட்டட் கோகனட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பிரஸ் கோகனட் சேர்த்துக் கொள்ளக்கூடாது. இறுதியாக நன்கு கலந்து எடுத்துக் கொண்டால் கேக் மாவு தயாராக உள்ளது.
இதை கேக் தயாரிக்கும் பாத்திரத்தில் மாற்ற வேண்டும். அதற்காக கேக் தயாரிக்கும் பாத்திரத்தில் அடி பக்கத்தில் பட்டர் பேப்பர் சேர்த்து மேல்பக்கமாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சமமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் அடிப்பகுதியில் ஒரு ஸ்டாண்ட் ஒன்று வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்டான்ட் வைத்த பிறகு ஐந்து நிமிடம் மூடி போட்டு அப்படியே சூடுபடுத்த வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கேக் மாவு தயார் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தை உள்ளே வைத்து குறைந்தது 35 முதல் 40 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
அதிரடியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ்! காரசாரமான ரெசிபி…
குக்கரில் வேகவைத்தால் விசில் போட அவசியம் இல்லை. முதல் 20 நிமிடம் மிதமான தீயிலும், அடுத்த 20 நிமிடம் மிகவும் மிதமான நெருப்பில் வேக வைத்து எடுக்க வேண்டும். 40 நிமிடம் கழித்து குறைந்தது அரை மணி நேரம் ஆவது ஈரம் துணி போட்டு கேக்கை ஆரம்பிக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து பட்டர் பேப்பரை எடுத்துக் கொள்ளலாம். இதன் மேல் பக்கம் நமக்கு விருப்பமான கிரின் வகைகள், நட்புகள், தேங்காய் துருவல் கலந்து சுவைக்காக பரிமாறலாம்.. இப்பொழுது ஓவன் இல்லாமல் சுவையான கேக் தயார்.