காரசாரமான குண்டூர் ஸ்பெஷல் மிளகாய் சோறு!

காரசாரமாக சாப்பிட வேண்டும் என்பது சிலரின் அனாதைய விருப்பமாக இருக்கும். அப்படி காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த குண்டூர் ஸ்பெஷல் மிளகாய் சோறு பிடித்தமான உணவு முறையாக மாறிவிடும். மிளகாய் சோறு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.. காரம் விதமாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் இதில் காரத்தை சற்று குறைவாக சேர்த்து செய்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு வேர்க்கடலை, கருவேப்பிலை சேர்த்து கூட கருவேப்பிலை வதக்க வேண்டும்.

வேர்கடலை பொன்னிறமாக மாறியதும் கைப்பிடி அளவு காய்ந்த வத்தலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். கடாயில் காய்ந்த வத்தல் வதங்கும் நேரத்தில் ஐந்து முதல் எட்டு பல் வெள்ளை பூண்டுவை நன்கு தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் இரண்டு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயுடன் நன்கு வதக்க வேண்டும். காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது பார்ப்பதற்கு நிறம் சற்று தூக்கலாக இருக்கும் ஆனால் காரம் இருக்காது. காஷ்மீரின் மிளகாய் தூள் இல்லாத பட்சத்தில் தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

விசேஷ நாட்களில் மேலும் சிறப்பாக வீட்டிலே செய்யப்படும் கதம்ப சாதம்!

மிளகாய்த்தூள் எண்ணெயுடன் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும். அதன் பின் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவையில் நாம் சூடாக படித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து உதிரியாக கிளறி கொடுக்க வேண்டும்.

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை சேர்த்து கிளறி ஒரு பத்து நிமிடம் முடி வைக்க வேண்டும். அதன் பின் பரிமாறினால் சுவையான குண்டூர் ஸ்பெஷல் மிளகாய் சோறு தயார். காரம் குறைவாக சாப்பிட விரும்புவார்கள் இதில் சேர்க்கும் காய்ந்த வத்தல் மற்றும் தனி மிளகாய் தூள் அளவை சற்று குறைவாக சேர்த்து சாப்பிடலாம்.