பாண்டிச்சேரி ஸ்பெஷல் சிக்கன் மக்ரோனி! ஸ்பைசியான ரெசிபி இதோ…

இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இட்லி ,தோசை போல பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் என பிடித்தமான உணவுகளாக மாறி உள்ளது. அதனால் குழந்தைகள் ரெஸ்டாரண்டுகளில் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிடும் பொழுது அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த முறை ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் வைத்து மக்ரோனி நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் 200 கிராம் அளவுள்ள சிக்கனை கழுவி சுத்தம் செய்து மசாலா தடவி எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முதலில் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு கப் அளவிற்கு மக்ரோனி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தண்ணீரில் ஊறியதும் வடிகட்டி தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி ரெட் சில்லி பேஸ்ட், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த மசாலாவுடன் ஒரு முட்டையை உடைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முட்டை சேர்த்த பிறகு பொடிமாஸ் பக்குவத்திற்கு வந்ததும் கைப்பிடி அளவு பொடிசாக நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

என்ன குழம்பு வைப்பது என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அசத்தல் குழம்பு ரெசிபி!

காய்கறிகள் மசாலாவுடன் இணைந்து நன்கு பாதி அளவுக்கு வெந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கலந்து கொடுத்து வேக வைக்க வேண்டும். அடுத்ததாக இதில் அரை தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இந்த நேரத்தில் நாம் வெந்நீரில் ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் ஒரு கப் மக்ரோனி சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பொறித்த சிக்கன்களை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான பாண்டிச்சேரி ஸ்டைல் சிக்கன் மக்ரோனி தயார்.