காலை வேலை ஹெல்தியா சாப்பிடும் ஸ்வீட்டா சாப்பிடணும்… வாங்க சீனிக்கிழங்கு சப்பாத்தி, பன்னீர் கிரேவி ரெசிபி!

நீண்ட நேரம் இரவு தூக்கத்திற்கு பிறகு காலை நாம் எடுத்துக் கொள்ளும் முதல் உணவு சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்துக்கள். ஆனால் குழந்தைகளுக்கு சத்து நிறைந்ததாக இருப்பதைவிட குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு வகையாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் சீனிக்கிழங்கு வைத்து அருமையான சப்பாத்தி ஒன்று தயார் செய்து அதற்கு சைடிஷ்ஷாக பன்னீர் கிரேவி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் சீனிக்கிழங்கு வைத்து சப்பாத்தி தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒன்று அல்லது இரண்டு சீனிக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நறுக்கி பத்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி ஆவியில் வந்த சீனிக்கிழங்கை தோல்களை நீக்கி நன்கு மசித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் மசித்து வைத்திருக்கும் சீனிக்கிழங்கை கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த மாவை சப்பாத்தி பதத்திற்கு நன்கு பதமாக பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது சப்பாத்தி செய்வதற்கு மாவு தயாராக மாறி உள்ளது.

அடுத்ததாக பன்னீர் மசாலா செய்வதற்கு மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, பத்து முந்திரி பருப்பு, ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

வித்தியாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்த வேண்டுமா? கேபேஜ் ரைஸ், வாழைக்காய் வடை இந்த காம்பினேஷனை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!

மிதமான தீயில் இரண்டு நிமிடம் சமைக்கும் பொழுது கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வர தொடங்கும்.அந்த நேரத்தில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறி கொள்ளலாம். இறுதியாக கஸ்தூரி மேத்தி அல்லது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பன்னீர் கிரேவி தயார்.

நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை சப்பாத்தி பதத்திற்கு வட்ட வடிவில் தட்டி தோசை கல்லில் போட்டு எடுத்தால் சுவையான சீனி கிழங்கு சப்பாத்தியும் தயார். இந்த இரண்டும் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாகவும் காலையிலேயே சத்தான ஆகாரங்களை சாப்பிட்ட திருப்தியும் நம் மனதிற்கு கிடைக்கும்.

Exit mobile version