வித்தியாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்த வேண்டுமா? கேபேஜ் ரைஸ், வாழைக்காய் வடை இந்த காம்பினேஷனை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!

தினம் தினம் புது விதமாக சமைத்து வீட்டில் உள்ளவர்களை அசத்த நினைக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த ரெசிபி மிகவும் கை கொடுக்கும். சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கும் முட்டைகோஸ், வாழைக்காய் போன்ற பொருட்களை வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் காமினேஷன் செய்யலாம். இதற்காக கேபேஜ் ரைஸ், வாழைக்காய் வடை செய்வதற்கான எளிமையான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் வாழைக்காய் வடை செய்வதற்கு இரண்டு வாழைக்காய் 4 துண்டுகளாக நறுக்கி நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வேக வைத்த வாழைக்காயை அதன் தோள்களை நீக்கி மசித்துக்கொள்ள வேண்டும். இந்த வாழைக்காய் விழுதுகளுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா போன்ற மசாலா வகைகளை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக துருவிய ஒரு துண்டு இஞ்சி, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி , இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு அரிசி மாவு, அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு ஒரு சேர திசைந்து வடை பதத்திற்கு மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது வடைக்கு மாவு தயாராக உள்ளது. ஒரு கடாயில் பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை உருண்டை வடிவில் தட்டி வடையாக முன்னும் பின்னும் பொன்னிறமாக மாறும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது வாழைக்காய் வடை தயார்.


அடுத்ததாக கேபேஜ் வைத்து ரைஸ் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, பத்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

முந்திரிப்பருப்பு பொன்னிறமாக மாறியதும் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் முட்டைக்கோசை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த சேலத்தும் மாங்காய் கறி!

ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்திருக்கும் பட்டாணி கைப்பிடி அளவு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது நமக்கு தேவையான சாதத்தை கடாயில் சேர்த்து முட்டை கோஸ் உடன் கலந்து கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக அரை தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் கலந்து இறக்கினால் சுவையான கேபேஜ் ரைஸ் தயார். லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக வித்தியாசம் வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்களுக்கு ஒரு முறை இந்த கேபேஜ் ரைஸ் வாழக்காய் வடை செய்து கொடுத்து அசத்துங்கள்.

Exit mobile version