குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி அதுவும் வீட்டிலேயே… தித்திப்பான கேரட் ஜெல்லி செய்வதற்கான ரெசிபி இதோ…

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது ஸ்னாக்ஸ் வகைகள் தான். உணவுகளை விட அதிகமாக விரும்பி சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ் வீட்டில் செய்து கொடுப்பதை விட கடைகளில் மட்டுமே அதிகமாக வாங்கி சாப்பிட ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் குழந்தைகள் ஆசையாக கடைகளில் வாங்கும் ஜெல்லி மிட்டாய் நம் வீட்டில் செய்ய அருமையான ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி மிட்டாய் சுவையானதாக மட்டும் இல்லாமல் சக்தி நிறைந்ததாக மாற்றி வீட்டிலேயே செய்வதற்கான ரெசிபி இதோ….

முதலில் 400 கிராம் அளவுள்ள கேரட்டை நன்கு கழிவு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு குக்கரில் சேர்த்து வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் இரண்டு விஷல்கள் வரை வேக வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து பாதியாக வெந்திருக்கும் கேரட்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழ் போல மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கேரட் விழுதுகளை ஒரு சல்லடையில் சேர்த்து மீண்டும் ஒருமுறை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கப் கேரட் விழுதிற்கு அரை கப் அளவு சர்க்கரை என்பது அளவு. அதன்படி அரை கப் அளவு சர்க்கரை, கால் கப் அளவு கார்ன்பிளார் மாவு, கேரட் வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பியூரியை அதில் சேர்த்துக் கொள்ளலாம். கைவிடாமல் கிளரும் பொழுது தேவைப்படும் நேரங்களில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

ஒரு கப் கோதுமை ரவை இருந்தால் போதும்… புசுபுசு பூரி தயார்! ரெசிபி இதோ…

தொடர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடம் கிளரும் பொழுது கேரட் விழுதுகள் நன்கு இறுகி கெட்டியாக வரும். கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு திரண்டு வந்தால் இப்பொழுது கேரட் ஜெல்லி தயாராக மாறி உள்ளது.
இந்த ஜெல்லியை ஒரு பாத்திரத்தில் பட்டர் சீட் வைத்து அதன் மேல் சமமாக பரப்பி ஊற்றி விட வேண்டும். தேவைப்பட்டால் அலங்காரத்திற்காக பாதாம் மற்றும் முந்திரி விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைக்க வேண்டும்.

அதன் பிறகு நமது விருப்பத்திற்கு ஏற்ப நறுக்கி பரிமாறினால் சுவையான கேரட் ஜெல்லி தயார். குழந்தைகள் இந்த ஜெல்லியை ஒரு முறை சாப்பிட்டால் கடைகளில் ஜெல்லி வாங்க வேண்டும் என்ற ஆசையை விட்டு வீட்டிலேயே செய்து சாப்பிடும் அளவிற்கு சுவை அருமையாக இருக்கும்.