சிக்கன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ரெசிபிகளில் ஒன்று பட்டர் சிக்கன் மசாலா. சிக்கன் வாங்க முடியாத அல்லது சாப்பிட முடியாத நேரங்களில் சிக்கனுக்கு பதிலாக முட்டை வைத்து இதே ரெசிபி அதே சுவையில் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். வாங்க சிக்கன் சுவையில் முட்டை பட்டர் மசாலா எளிமையான முறையில் வீட்டில் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…
இந்த முட்டை பட்டர் மசாலா செய்வதற்கு நான்கு மூட்டைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை குறைந்தது ஐந்து பேர் தாராளமாக சாப்பிடலாம். நான்கு முட்டையை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.
முட்டை வெந்து வரும் நேரத்தில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து அதனுடன் ஆறாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஆறாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், பத்து பல் வெள்ளை பூண்டு, , ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு சிறிய துண்டு லவங்கம், காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் மூன்று, கைப்பிடி அளவு முந்திரி அல்லது ஐந்து முதல் பத்து முந்திரி பருப்புகள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அரைத்த பொருட்களை சிறிது நேரம் சூடு ஆறவைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் முட்டை நன்கு வெந்து தவறாக இருக்கும். அதை தோள்களை நீக்கி இரு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் கூடுதலாக இரண்டு தேக்கரண்டி வெண்ணை சேர்த்துக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது அவித்து இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டைகளை மசாலாவின் மேல் சேர்த்து உண்ணும் பின்னும் மசாலா ஒருசேர படும் வரை கிளறி கொடுக்க வேண்டும்.
முட்டையை மசாலா உடன் நன்கு கலந்து பொறித்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விடலாம். இப்பொழுது மீண்டும் ஒரு கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக பட்டர் மசாலாவிற்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் மசாலா தடவி பொறித்து வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சேர்த்து ஒரு நிமிடம் கொதி வர வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து கஸ்தூரி மேத்தி, அரை தேக்கரண்டி கரம் மசாலா, இரண்டாக கீறிய பச்சை மிளகாய் 3 சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். அடுப்பை அணைத்த பிறகு மேலும் கூடுதலாக ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து மூடி விட வேண்டும். இந்த வெண்ணை இறுதியாக நன்கு உருகி முட்டை பட்டர் மசாலா பரிமாறுவதற்கு முன்பாக அடித்தூளாக தயாராக மாறிவிடும்.