சுட்டி குட்டிஸ்களுக்காக இன்ஸ்டன்ட் பன் தோசை ரெசிபி!

தோசை பிரியர்களின் முதல் இடத்தை தட்டிப்பறிப்பது குட்டீஸ்கள்தான். வீட்டில் இருக்கும் குட்டி
சுட்டிகளுக்கு தோசை என்றால் தனி பிரியம் தான். அதிலும் தோசை மாவு இல்லாத சமயங்களில் குழந்தைகளை திருப்திப்படுத்துவது சிரமமான ஒன்றாக இருக்கும். இந்த முறை தோசையுடன் போட்டி போடும் சுவையில் நொடியில் தயாராகும் இன்ஸ்டன்ட் பன் தோசை செய்ததற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் வறுக்காத ரவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு பொடியாக மாற்றிக் கொள்ளலாம். அடுத்து இதில் மூன்று உருளைக்கிழங்குகளை தோல் சீவி பொடியாக நறுக்கி சேர்த்து அரைக்க வேண்டும். உருளைக்கிழங்கு சேர்த்து அரைக்கும் பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், துருவிய ஒரு கேரட், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை இலை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாவை குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் அப்படியே வைத்துவிடலாம்.
அடுத்ததாக தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாவை லேசாக முறுமுறு தோசை போல ஊற்றாமல் சற்று கெட்டியாக பன் தோசை போல சேர்த்து தாராளமாக நல்லெண்ணெய் வைத்து முன்னும் பின்னும் பொன் நிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான பன் தோசை தயார்.

மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த தர்பூசணி சாதம்- பாகற்காய் துவையல்!

இந்த தோசைக்கு உடனடியாக தயார் செய்யும் இன்ஸ்டன்ட் சட்னி ரெசிபி ஒன்றை பார்க்கலாம். ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி பழம், வெள்ளை பூண்டு, , காரத்திற்கு ஏற்ப மூன்று காய்ந்த வத்தல், நெல்லிக்காய் அளவு புளி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த சட்னிக்கு வழக்கமான தாளிப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். சுவையான பன் தோசை கார சட்னி தயார்.

Exit mobile version