சமையல் நிகழ்ச்சிகளில் பொதுவாக சில வகையான உணவு ரெசிபிகள் திடீரென பிரபலம் அடைவது வழக்கமான ஒன்று. அதிலும் இந்த முறை மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த தர்பூசணி சாதம் மற்றும் பாகற்காய் துவையல் அனைவரையும் சாப்பிடத் தூண்டும் விதத்தில் பார்ப்பதற்கே கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. வாங்க இந்த ரெசிபியை நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
தர்பூசணி சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை 15 நிமிடத்திற்கு முன்பாக நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்னே கால் கப் அளவிற்கு தர்பூசணி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 15 நிமிடம் கழித்து ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்னைகால் கப் அளவிற்கு தர்பூசணி சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து இதில் ஒரு தேக்கரண்டி சில்லி ஃப்ளேக்ஸ், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
அடுத்ததாக பாவக்காய் துவையல் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம். இப்பொழுது பாவக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து நடுத்தர அளவில் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 150 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பேக்கிங் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை, இரண்டு பல் வெள்ளைப் பூண்டு, 3 வத்தல் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் நம் பேக்கிங் செய்து வைத்திருக்கும் பாகற்காய், வறுத்த வேர்க்கடலை, காய்ந்த வத்தல், வெள்ளைப் பூண்டு, அரை தேக்கரண்டி உப்பு, சிறிய நெல்லிக்காய் அளவு புளி, அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள், நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இட்லி மாவு இல்லாத சமயங்களில் கோதுமை தோசைக்கு பதிலாக சுவையான மற்றும் ஹெல்த்தியான தோசை ரெசிபி!
இப்பொழுது நாம் அரைத்த விழுதுகளை கடாயில் சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு நிமிடம் வரைகலந்து கொடுத்து கொள்ளலாம். அடுத்ததாக தாளிப்பிற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி என்னை சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி பூசணி விதை சேர்த்து நன்கு தாளித்து சட்னி மற்றும் சாதத்தில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது தித்திப்பான தர்பூசணி சாதமும், நல்ல காரம் மற்றும் புளிப்பு நிறைந்த பாகற்காய் துவையல் தயார்.