தட்டு நிறைய பிரியாணி இருந்தாலும் திகட்டாமல் சாப்பிட இது ஒன்று கண்டிப்பாக வேண்டும்? வாங்க கத்திரிக்காய் ரைத்தா ஹோட்டல் சுவையில் செய்வதற்கான ரெசிபி இதோ!

இன்றைய நிலைமையில் பிரியாணி என்பது உலக அளவில் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றாக மாற துவங்கி உள்ளது. பிரியாணி பிடிக்காது என சொல்லும் நபர்களை நாம் பார்ப்பது கடினம் தான். அந்த அளவிற்கு பிரியாணி மேல் அனைவருக்கும் தனி விருப்பம் தான். பலவகையான பிரியாணிகளும் அதன் சுவையிலும் பல வேறுபாடுகள் இருந்தாலும் பிரியாணியை நாம் திகட்டாமல் ருசித்து சாப்பிடுவதற்கு முக்கிய காரணம் பிரியாணி உடன் சேர்த்து பரிமாறப்படும் கத்திரிக்காய் ரைத்தா தான். இந்த ரைத்தா எண்ணெயுடன் சேர்த்து நல்ல காரம், புளிப்புடன் இருக்கும் பொழுதே பிரியாணி சாப்பிடும் ஆசை மேலும் அதிகரிக்கிறது. சுவையான இந்த எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொன்னிறமாக தாளித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கும் பொழுது வாசனையாக இருக்கும்.

ஒரு கப் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காயை எண்ணெயோடு சேர்த்து வதக்கும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

உப்பு சேர்த்தவுடன் கடாயை மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் வெந்து வருவதற்கு தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. கடாயில் உள்ள எண்ணெயில் கத்திரிக்காய் நன்கு வதங்கி வெந்து வர துவங்கும்.

ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் கத்திரிக்காயை நன்கு கிளற வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி இல்லாமல் நாகர்கோவில் ஸ்பெஷல் கல்யாண வீட்டு பருப்பு தண்ணி குழம்பு! ரெசிபி இதோ…

வெங்காயம் பாதியாக வதங்கியதும் மூன்று நன்கு பழுத்த தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் மூன்றையும் ஒருசேர கிளறி கொடுத்து மீண்டும் மூடி போட்டு ஐந்து முதல் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

5 நிமிடம் கழித்து கத்திரிக்காய் நன்கு வதங்கி நாம் சேர்த்து எண்ணை தனியாக பிரிந்து வர துவங்கும். இந்த நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக இரண்டு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், மூன்று தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் புளி கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி நன்கு கரைத்து தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். புளி தண்ணீர் சேர்த்த பிறகு மீண்டும் ஐந்து நிமிடம் இதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இறுதியாக ஒரு முறை உப்பு சரி பார்த்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் ரைத்தா தயார்.

Exit mobile version