டீக்கடைகளில் எப்போதும் வடை பஜ்ஜிக்கு பதிலாக சில நேரங்களில் வித்தியாசமாக சாப்பிட தோன்றும் பொழுது நாம் சாப்பிடும் ஒரே உணவு பிரெட் ஆம்லெட் தான். சூடாக பரிமாறப்படும் இந்த பிரட் ஆம்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்களுக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று. எளிமையான முறையில் இந்த பிரட் ஆம்லெட் வீட்டில் செய்தாலும் அதற்கு சைட் டிஷ்ஷாக பரிமாறப்படும் சட்னி மற்றும் மயோனைஸ் போன்றவை நம் வீடுகளில் செய்வது மிகவும் குறைவு. இந்த முறை டீக்கடைகளில் படிமாறப்படும் பிரெட் ஆம்லெட் போல சட்னி மற்றும் மயோனைஸ் வைத்து வீட்டில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் பிரட் ஆம்லெட் உடன் பரிமாறப்படும் சட்னி செய்வதற்கான ரெசிபியை பார்த்து விடலாம். ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று தேக்கரண்டி பொரிகடலை, இரண்டு பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப 5, ஒரு கப் புதினா இலை, ஒரு கப் கொத்தமல்லி இலை, பாதியளவு எலுமிச்சை பழச்சாறு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் போதுமானது.
இந்த சட்னி ஃப்ரிட்ஜில் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாமல் பதப்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது மையோனை செய்வதற்கான ரெசிபியை பார்த்து விடலாம். அதே மிக்ஸி ஜாரில் ஒரு முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி சக்கரை, இரண்டு சிட்டிகை உப்பு, , பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து இரண்டு மூன்று முறை அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ரீபைன்ட் ஆயில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அடித்து எடுத்தால் மையோனஸ் தயார். ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஒரு மசாலா போதும்… சிக்கன், மட்டன் என அனைத்தையும் தூள் பறக்க விடலாம்!
இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் தடவி நன்கு சூடானதும் நாம் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை கல்லின் மேல் பரப்பிக் கொள்ள வேண்டும். அதன் மேல் பக்கம் இரண்டு பிரட் துண்டுகளை வைத்துக் கொள்ளலாம். ஒரு பிரட்டின் மேல் பக்கம் சட்னி, மற்றொரு பிரட்டின் மேல் பக்கம் மயோனைஸ் தடவிக்கொள்ள வேண்டும்.
இரண்டு பக்கம் பிரட்டி போட்டு எடுத்தால் அருமையான டீக்கடை ஸ்டைல் பிரட் ஆம்லெட் தயார்.