இந்த ஒரு மசாலா போதும்… சிக்கன், மட்டன் என அனைத்தையும் தூள் பறக்க விடலாம்!

அசைவ உணவுகளான சிக்கன் மற்றும் மட்டன் வைத்து ரெசிபிகள் செய்யும் பொழுது அதற்கேற்ற மசாலா வகைகளை பக்குவமாக பயன்படுத்தும் பொழுது மட்டுமே வாசனையும் சுவையும் அசத்தலாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் கமகம வாசனை உடன் சமைக்கும் பொழுது மட்டுமே நமக்கு சிறந்த பாராட்டும் கிடைக்கும். இப்படி பாராட்டை அள்ளித்தரும் விதமாக நாம் சமைக்கும் பொழுது பயன்படுத்தும் மசாலா மிக முக்கியமானது. இந்த வகையில் இந்த முறை இந்த ஒரு மசாலா வைத்து சிக்கன் மற்றும் மட்டன் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, கால் தேக்கரண்டி வெந்தயம், இரண்டு அண்ணாச்சி பூ, நான்கு கிராம்பு, சிறிதளவு கல்பாசி, இரண்டு ஜாதிப்பூ, நான்கு பட்டை துண்டுகள், நான்கு ஏலக்காய் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.

இதில் இறுதியாக நான்கு பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கி வாசனை வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றிவிடலாம். மீண்டும் அதே கடாயில் ஒரு கப் மல்லி சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். மல்லியில் இருந்து நல்ல வாசனை வரும் நேரத்தில் மீண்டும் அதை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதே கடாயின் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு காய்ந்து வரும் வரை வறுத்து மீண்டும் கட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் 7 சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வருத்த பொருட்களையும் மீண்டும் அதே தட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை இல்லாமல் பிரட் வைத்து தித்திப்பான புட்டிங் ரெசிபி இதோ..

நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் லேசாக சூடு ஆறும் வரை தனியாக அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த மசாலா பொருட்களை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான மற்றும் கமகம வாசத்துடன் மசாலா தயார். மசாலா சிக்கன், மட்டன், வெஜிடபிள் குருமா என அனைத்திற்கும் பயன்படுத்தும் பொழுது சுவை அருமையாக இருக்கும். கடையில் வாங்கும் மசாலாக்களை தவிர்த்து இது போன்ற வீட்டிலேயே மசாலா செய்து பயன்படுத்தும் பொழுது கூடுதல் சுவை ஆகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

Exit mobile version