தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் போதும்… சுகர் இருந்த இடம் தெரியாமல் பறந்து விடும்! அருமையான ரெசிபி இதோ…

உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக அல்லது அதிகமாக இருந்தாலும் முறையான உணவுகள் மூலம் அதை சரிப்படுத்த முடியும். பாகற்காய் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை சத்து குறைந்து சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இந்த முறை பாகற்காய் வைத்து சிப்ஸ், பக்கோடா, வறுவல் என செய்யாமல் ஊறுகாய் செய்து பல மாதங்கள் ஆனாலும் வைத்து சாப்பிடலாம். தினமும் இந்த ஊறுகாயை சாதத்துடன் ஒரு தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வரும்பொழுது சர்க்கரை அளவு சரியான விதத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். வாங்க பாகற்காய் ஊறுகாய் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான அளவு பாகற்காய்களை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை வட்ட வடிவில் துண்டுகளாக விதைகளை நீக்கி நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சேர்த்து இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு பெரிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து வேக வைக்க வேண்டும்.

மிதமான தீயில் பத்து முதல் 12 நிமிடம் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் அரை தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி கடுகு சேர்த்து நன்கு பொறியும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தேக்கரண்டி பெருங்காயம், கால் கப் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெயோடு நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நம் வேக வைத்திருக்கும் பாகற்காயை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

டீக்கடை ஸ்டைல் அருமையான பிரட் ஆம்லெட் ரெசிபி! சட்னியில் தொடங்கி மயோனைஸ் வரைசெய்வதற்கான விளக்கம் இதோ..

பாகற்காயுடன் வேக வைத்த புளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த விழுதுகளை அதன் பிறகு கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வறுத்து அரைத்த வெந்தயம் மற்றும் கடுகு மசாலா, ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்பொழுது சுவையான பாரம்பரிய முறைப்படி பாகற்காய் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை காற்று புகாத கண்ணாடி பாத்திரத்தில் பக்குவப்படுத்தும் பொழுது மூன்று முதல் ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. தினமும் ஒரு தேக்கரண்டி இந்த ஊறுகாய் சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல மாற்றத்தை உணர முடியும்.