நான் வீடுகளில் குட்டக்கோஸ் வாங்கினால் அதை வைத்து சாம்பார் காரக்குழம்புக்கு ஏற்றார் போல் வஞ்சனம், கூட்டு, பொரியல் செய்வது வழக்கம். இந்த நேரங்களில் முட்டைக்கோசை பொடியாக நறுக்கி கடலை மாவு சேர்த்து 65 கூட செய்யலாம். ஆனால் முட்டைக்கோஸ் வைத்து பெரும்பாலும் யாரும் பிரியாணி செய்ததில்லை. ஆனால் முட்டைக்கோஸ் வைத்து செய்யும் பிரியாணி மிகவும் சுமையாகவும் அருமையாகவும் இருக்கும். இந்த முட்டைக்கோஸ் பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த பிரியாணி செய்வதற்கு ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் இரண்டு பிரியாணி இலை, ஐந்து முதல் 10 முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி பாதியாக வதங்கியதும் அரை கப் பச்சை பட்டாணி, இரண்டு கப் முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது சேர்த்து வதக்க வேண்டும். முட்டைக்கோஸ் பாதியாக வதங்கியதும் கைப்பிடி அளவு புதினா, இரண்டு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்பொழுது மிதமானதீயில் இந்த கலவைகளை கலந்து கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு பெரிய அளவுள்ள பட்டை, ஏலக்காய் 4, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், 4 கிராம்பு, சிறிதளவு ஜாதி பத்திரி சேர்த்து வாசனை வரும் அளவு வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி சாரில் சேர்த்து நன்கு பொடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த கலவையை குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கோவக்காய் பிடிக்காது என சொல்பவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையான கோவக்காய் பொரியல்!
இப்பொழுது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு 2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளலாம்.
மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும். குறைந்தது இரண்டு முதல் மூன்று விசில்கள்வரும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் பிரியாணி தயார். பரிமாறுவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிலரை பரிமாறினால் சுவை இருக்கும். சாதாரண வெஜிடபிள் பிரியாணி போல பார்ப்பதற்கு தோன்றினாலும் சாப்பிடும் பொழுது சற்று வித்தியாசமான சுவையில் சிறப்பாக இருக்கும்.
இந்த பிரியாணிக்கு கத்தரிக்காய் ரைத்தா, வெங்காய பச்சடியுடன் சாப்பிடும் பொழுது திருப்தியாக இருக்கும்.