லஞ்ச் பாக்ஸில் பீட்ரூட் சாப்பிடாமல் வரும் குழந்தைகளுக்கு புதிதாக பீட்ரூட் புலாவ்! சுவையான ரெசிபி இதோ…

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் தயிர் சாதம், லெமன் சாதம் போல பீட்ரூட் சாதம் கொடுத்து விடுவது வழக்கம். ஆனால் சில குழந்தைகள் அதை சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் என நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவிகரமாக இருக்கும். வாங்க பீட்ரூட் புலாவ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இப்பொழுது ஒரு அகலமான குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு பட்டை, ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 150 அல்லது 200 கிராம் அளவுள்ள பீட்ரூட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை கடாயின் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் எண்ணெயுடன் சேர்த்து 2 நிமிடம் வழங்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் குலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து ஒரு கப் தேங்காய் பால் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய மசாலா பிரட்! எளிமையான ரெசிபி…

இப்பொழுது தண்ணீர் நன்கு கொதித்து வரும் வரை சிறிது நேரம் காத்திருக்கவும். அதன் பின்பு 20 நிமிடம் ஊற வைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். அரிசி சேர்த்து பிறகு மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து குக்கரை மூடிவிட வேண்டும்.

20 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான பீட்ரூட் புலாவ் தயார். பரிமாறுவதற்கு முன்பாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை மற்றும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினாள் சுவை அருமையோ அருமையாக இருக்கும்.

Exit mobile version