பழைய சாதம் வைத்து பத்து நிமிடத்தில் கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி!

வீடுகளில் பொதுவாக பழைய சாதம் மீதம் வரும் நேரங்களில் தாளித்து தயிர் சாதம் போல சாப்பிடுவது வழக்கம். பழைய சாதம் சாப்பிட்டால் குளிர்ச்சியின் காரணமாக சளி தடுமல் போன்ற பிரச்சனை ஏற்படும் வீடுகளில் பழைய சாதத்தை வடகத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்த முறை பழைய சாதம் வைத்து கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி செய்து அசத்தலாம் வாங்க. மீதம் இருக்கும் சாதம் வைத்து அருமையான டிபன் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழைய சாதம் ஒரு கப் தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கைப்பிடி அளவு தேங்காய் துருவல், கைபிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசையும் பொழுது கைகளில் ஒட்டாமல் நன்கு கெட்டி பதத்திற்கு வரும்வரை தயார் செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். ஒரு பாலித்தீன் பை அல்லது வாழை இலையில் எண்ணெய் தடவி நாம் உருண்டை பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை நடுவே வைத்து வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் தட்டி வைத்திருக்கும் உருண்டைகளை தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும். தோசை கல்லில் முண்ணும் பின்னும் நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை சமைத்துக் கொள்ளலாம். இந்த அக்கி ரொட்டி செய்வதற்கு உன்னை பயன்படுத்தி செய்தாலும் சுவை அருமையாக இருக்கும்.

உடல் எடை குறைத்து புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு புதினா பன்னீர் புலாவ் ரெசிபி!

முன்னும் பின்னும் பொன்னிறமாக புரிந்து வந்தால் சுவையான பழைய சாத அக்கிரொட்டி தயார். இது செய்வதற்கு மிக எளிமையாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். பழைய சாதம் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இதுபோல ரொட்டி செய்து கொடுக்கும் பொழுது அருமையாக காலை டிபன் சாப்பிட்டு விடலாம்.

இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, இட்லி பொடி வைத்து சாப்பிடும் பொழுது அருமையோ அருமையாக இருக்கும்.