ரம்ஜான் திருநாள் அன்று பிரியாணி மட்டுமே ஸ்பெஷல் என பலரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊருக்கும் தனி சிறப்பும் உள்ளது. அதிலும் குறிப்பாக காயல்பட்டினம் ரம்ஜான் ஸ்பெஷல் ஆக அன்று மட்டுமே தயார் செய்யப்படும் அக்காரா புளிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ரெசிபியை நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கம் இதோ….
முதலில் முதலில் அரைக்கப் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை 10 நிமிடம் ஒரு வெள்ளை துணியில் உலர்த்த வேண்டும்.
அடுத்ததாக அதை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த வரிசையை மையாக அரைக்காமல் ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு கப் தேங்காய் துருவல், இரண்டு ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து பால் எடுக்க வேண்டும்.
இப்படி முதல் பால், இரண்டாம் பால் என தேங்காய் அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் வீதம் பால் தேவைப்படும். இப்படி ஒரு அகலமான கடாயில் நாம் இரண்டாவது எடுத்த தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் பொடி செய்து வைத்திருக்கும் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம்.
மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் நாட்டுசர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டி சேர்ந்து நன்கு கரைந்து கெட்டி பதத்திற்கு வரும்பொழுது அடுத்த இரண்டு கப் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரை மசியலுக்கு சேப்பங்கிழங்கு வறுவல்! எளிமையான முறையில் அருமையான சுவையில் செய்வதற்கான ரெசிபி இதோ..
அடுத்ததாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக மீதம் இருக்கும் முதல் கெட்டி தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து இறக்கி விட வேண்டும். இதன் மேல் பக்கம் தேவைப்பட்டால் முந்திரி, பாதாம் என நமக்கு பிடித்தமான பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்ப்பால் மற்றும் அரிசி சேர்த்து செய்யும் இந்த பலகாரம் மிக எளிமையாக இருந்தாலும் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.