இளம் ஆட்டுக்கறி வைத்து காயல் பட்டினம் ஸ்பெஷல் பாரம்பரிய அகனி கறி செய்வதற்கான ரெசிபி இதோ!

அசைவ உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றான மட்டன் வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்தாலும் அடுத்தடுத்து புதுவிதமான ரெசிப்பிகள் செய்ய ஆர்வமாக இருப்பவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் உதவியாக இருக்கும். இந்த முறை மட்டன் வைத்து காயல்பட்டினம் ஸ்பெஷல் அகனி கறி எளிமையான முறையில் எந்தவிதமான மசாலா கலவையும் இல்லாமல் சுவையாக செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம் வாங்க..

முதலில் அரை கிலோ அளவுள்ள இளம் ஆட்டுக்கறி எடுத்துக்கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஐந்து அல்லது ஆறு பச்சை மிளகாய், ஒரு கப் கெட்டி தயிர், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து குறைந்தது அரை மணி நேரம் கலந்து அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அடுத்து கைப்பிடி அளவு பாதம், முந்திரி, பிஸ்தா இவற்றை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக விழுதுகளாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி நெய், இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும். இது ஒரு சிறிய துண்டு பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை ஒன்று, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளலாம். இதைத்தொடர்ந்து 15 முதல் 20 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கால் கப் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

மதுரை ஸ்பெஷல் கருப்பட்டி பருத்திப்பால் வைத்து அல்வா ரெசிபி!

இதனுடன் மூன்று உருளைக்கிழங்குகளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் முதலில் ஊற வைத்திருக்கும் மட்டன் கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சரிபார்த்து கலந்து குக்கரை மூடி விட வேண்டும்.

மிதமான தீயில் நான்கு விஷல்கள் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ளலாம். அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிய பிறகு பாதாம் முந்திரி பிஸ்தா ஊறவைத்து அரைத்து விழுதுகளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான மட்டன்அகனி கறி தயார். இதில் பெரிதளவு மசாலா பொருட்கள் ஏதும் கலக்காமல் மிதமான சுவையில் அட்டகாசமான ரெசிபி செய்து கொள்ளலாம்.

Exit mobile version