பத்து நிமிடத்தில் தயாராகும் கொங்கு நாட்டு ஸ்பெஷல் அடை ரெசிபி!

பொதுவாக இட்லி மற்றும் தோசைக்கு பதிலாக வித்தியாசமாக சமைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிப்பி மிகவும் உதவியாக இருக்கும். அதே அரிசி மற்றும் பருப்பு பயன்படுத்தி செய்யும் இந்த அடை ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். வாங்க எளிமையான முறையில் ஸ்நாக்ஸ் அல்லது உணவிற்காக பயன்படுத்தப்படும் இந்த அடை ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் புழுங்கல் அரிசி மற்றும் கால் கப் துவரம் பருப்பு சேர்த்து நன்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், 10 முதல் 15 சின்ன வெங்காயம், 3 பல் வெள்ளைப்பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த தேங்காய் விழுதுகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக ஊற வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பு ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். இதையும் தேங்காய் மசாலா உள்ள பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

காரசாரமான வறுத்து அரைத்த மசாலா வைத்து குடல் கறி ரெசிபி!

இதனுடன் அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருங்காயம், அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாவு நல்ல கெட்டி பதத்தில் இருக்க வேண்டும்.

இப்பொழுது மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஈரத்துணியில் வைத்து வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு பருப்பு வடை போல வட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இப்பொழுது எண்ணெயில் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். முன்னும் பின்னும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான பருப்பு அடை தயார்.