தென்னிந்திய உணவு முறைகளில் தோசை அனைவருக்கும் பிடித்த உணவில் ஒன்று. அதிலும் தோசை சாதாரணமாக இல்லாமல் அடை தோசையாக செய்து சாப்பிடும் பொழுது சத்து நிறைந்ததாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும். அடை தோசையில் பலவிதமான ரெசிபிக்கள் உள்ளது. இன்று அதிகமாகச் சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கு வைத்து அருமையான காரசாரமான அடை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த அடை தோசை செய்வதற்கு முதலில் மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கப் பச்சரிசி, கால் கப் துவரம் பருப்பு ஒன்றாக சேர்த்து இரண்டு முறை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்பொழுது நன்கு தரமான மரவள்ளிக்கிழங்கை அதன் தோள்கள் நீக்கி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மரவள்ளி கிழங்கு துண்டை புட்டு துருவல் வைத்து நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் ஊற வைத்திருக்கும் அரிசி மற்றும் கடலை பருப்புவை நன்கு மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். பருப்பு, வத்தல் அது, அரிசி மூன்றும் 70% ஒரு சேர அரைத்தால் போதுமானது. மாவு கொரகொரப்பாக வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த மாவுடன் நாம் துருவி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கு துருவளையம் சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாவு மையாக அரைக்க தேவையில்லை சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டாலே அடை தோசை சுவையாக இருக்கும்.
அரைத்த மாவை ஒரு தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை தாளித்து க்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவைப்பட்டால் முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம், பல்லு பல்லாக கீறிய தேங்காய் என சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த தாளிப்பை மாவுடன் சேர்த்து கிளற வேண்டும்.
இப்பொழுது தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், கால் தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து விதமாக சூடானதும் முறுகலாக இல்லாமல் சற்று மெத்து மெத்து என இருக்கும் அளவிற்கு பக்குவமாக தோசையை பரப்பிக் கொள்ள வேண்டும். இன்னும் பின்னும் நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை தோசையை சுட்டி எடுத்தால் சுவையான மரவள்ளி கிழங்கு அடை தயார்.
மரவள்ளி கிழங்கு அடை தோசைக்கு தேங்காய் சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, அவியல் வைத்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.