நம் வீடுகளில் காலை, மதியம், மாலை என மூன்று வேளை பலவிதமான ரெசிபிகள் சமைத்தாலும் ஒரு சில குழம்பு மற்றும் காய் வகை அனைத்திற்கும் பொருந்தும் விதத்தில் இருக்கும். அந்த ரெசிபியை சமைக்கும் பொழுது அடுத்த வேலை சமைக்க வேண்டும் என்ற கவலை எதுவும் இல்லாமல் அதை வைத்தே சமாளித்துக் கொள்ளலாம்.. அப்படிப்பட்ட ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா, சூடான சாதம், வெரைட்டி ரைஸ் என அனைத்திற்கும் பொருந்தும் விதத்தில் காய்கறிகள் நிறைந்த கடாய் வெஜிடபிள் செய்வதற்கான எளிமையான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
முதலில் கடாய் வெஜிடபிள் செய்வதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, 5 காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைத்துக் கொள்ளலாம். அதன் பின் மசாலா பொருட்களை அரைத்து கொள்ளவும்.
அடுத்ததாக அதே அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து முதலில் எண்ணெயில் நன்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் அதை எண்ணெயில் நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர், பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் கூடுதலாக இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு பிரியாணி இலை, இரண்டு பட்டை, ஒரு காய்ந்த வத்தல் சேர்த்து தலித்துக் கொள்ள வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு தக்காளி பழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து விழுதலாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதுவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
தக்காளி விழுதுவை கடாயில் சேர்த்த நன்கு வதக்கி கொதிக்க விட வேண்டும். அந்த நேரத்தில் நாம் எண்ணெயில் நன்கு வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளை சேர்த்த பின்பு மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
இதுல கூட பிரியாணி செய்யலாமா? வாயை பிளக்க வைக்கும் முருங்கைக்காய் பிரியாணி ரெசிபி இதோ!
காய்கறிகள் முக்கால் பாகம் நன்கு வெந்த பிறகு கடாய் வெஜிடபிள் இருக்கு தேவையான உப்பு மற்றும் நாம் வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம். மசாலா சேர்த்து பிறகு ஒரு கொதி வந்தவுடன் 10 முந்திரி பருப்பு அரைத்து அந்த கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிடம் நன்கு கொதி வந்து இறக்கினான் சுவையான கடாய் பன்னீர் தயார்.
இந்த கடாய் பன்னீர் கிரேவி நம் சமையலறை வேலையை குறைப்பதோடு மட்டுமில்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அனைவருக்கும் பிடித்த உணவாக மாறிவிடும்..