ஏ பி சி மால்ட் வைத்து அருமையான அல்வா ரெசிபி! இந்த தீபாவளிக்கு செய்த அசத்தலாம் வாங்க…

இன்றைய நவீன உலகில் சத்து குறைபாடு உள்ளவர்கள் மற்றும் சத்து முறையாக எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் ஏபிசி மால்ட் அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்ற உணவுகளை வைத்து தயாரிக்கப்படும் சத்தான பானங்களை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இந்த முறை இந்த ஏபிசி மால்ட் அருமையான அல்வா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு முழு ஆப்பிள், நறுக்கிய ஒரு முழு பீட்ரூட், பொடியாக நறுக்கிய ஒரு கேரட் சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும். அழைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அரைத்த பிறகு ஒரு பெரிய சல்லடை அல்லது வெள்ளை துணி கொண்டு நன்கு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீருடன் ஒரு கப் அளவு கான்பிளவர் மாவு சேர்த்து கட்டிகள் விழாக வண்ணம் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் அளவு வடிகட்டிய தண்ணீர் அளவிற்கு ஏற்ப மூன்று கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம் இது அவரவர் தனி விருப்பம் .

இப்பொழுது இந்த கலவையை நன்கு கலந்து கொடுத்து அடுப்பில் ஏற்றுக் கொள்ளலாம். மிதமான தீயில் தொடர்ந்து கைவிடாமல் கிளற வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கிளறிய பிறகு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.

தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பாக மாற்றும் இனிப்பு வகைகளில் ஒன்றான அச்சு முறுக்கு செய்வதற்கான ரெசிபி!

10 நிமிடம் கிளறிய பிறகு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, கருப்பு திராட்சை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து அல்வா பதம் வந்ததும் கிளறி இறக்கிவிட வேண்டும்.

இப்போது சுவையான ஏ பி சி அல்வா தயார். இந்த அல்வா தயார் செய்த பிறகு நம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பார்த்து சுவைக்கச் சொல்லும் பொழுது எதை வைத்து அல்வா செய்தார்கள் என்று குழப்பமே ஏற்படும் அந்த அளவிற்கு சுவை அமிர்தம் ஆகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.