தலைக்கு தேய்த்து குளிக்கும் கற்றாழை வைத்து தித்திப்பான வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி!

பொதுவாக நம் வீடுகளில் திருஷ்டிக்காக வளர்க்கப்படும் கற்றாழையில் பலவிதமான நன்மைகள் உள்ளது. உடல் சூட்டை தணிக்கும் கற்றாழையை பலர் தலையில் தேய்த்து குளித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் இந்த கற்றாழையின் உள்பக்கம் இருக்கும் சதை பகுதியை முகத்தில் பூசி வருவதன் மூலமாக முகம் நல்ல பொலிவுடன் இளமையாக இருக்க முடியும். இப்படி கற்றாழையை நம் வெளிப்புறத்தில் பயன்படுத்தி பார்த்துள்ளோம். ஆனால் கற்றாழையை உணவாக சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைத்து வருகிறது. இந்த வகையில் தற்போது கற்றாலை வைத்து தித்திப்பான அல்வா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் நமக்கு தேவையான கற்றாழையை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் வெளிப்புறம் உள்ள பச்சை நிறத் தோலை நன்கு கழுவி சுத்தம் செய்து நீக்கிக் கொள்ள வேண்டும். உள்ளே இருக்கும் வெள்ளை நிற சதை பகுதியை குறைந்தது மூன்று முறையாவது தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக பத்து வைத்து விட வேண்டும்.

இப்படி நன்கு கழுவி சுத்தம் செய்த கற்றாழையின் சதை பகுதியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த அரைத்த கற்றாழை விழுதுவை ஒரு அகலமான கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிதமான தீயில் கற்றாழை விழுதுவை ஐந்து முதல் ஏழு நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். ஏழு நிமிடம் கொதிக்கும் பொழுது கற்றாழையிலிருந்து பச்சை வாசனை சென்றுவிடும். இந்த நேரத்தில் இரண்டு தேக்கரண்டி கான்பிளவர் மாவை தண்ணீரில் நன்கு கரைத்து கட்டிகள் விழாக வண்ணம் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் கான்பிளவர் மாவு கலந்து பிறகு ஒரே விதத்தில் தொடர்ந்து கலந்து கொடுக்க வேண்டும். குறைந்தது 5 நிமிடம் கைவிடாமல் கிளரும் பொழுது கற்றாழை விழுது கெட்டி பதத்திற்கு வந்து விடும். இந்த நேரத்தில் அரை கப் சர்க்கரை அல்லது அரை கப் வெள்ளம் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

பாட்டியின் அதே கை பக்குவத்தில் சுவையில் எந்த மாற்றமும் இல்லாத கறி முருங்கக்காய் குழம்பு!

உங்களுக்கு தேவைப்பட்டால் கருப்பட்டி கூட சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நன்கு கரைந்து கற்றாழையுடன் ஒரு சேர கிளற வேண்டும். இறுதியாக மீண்டும் இறுகி கட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கிளறி கொள்ள வேண்டும். கற்றாழை விழுது அல்வா பதத்திற்கு கெட்டியாக வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கற்றாழை அல்வா தயார்.

தித்திப்பான இந்த அல்வாவை சுவைத்து யாராலும் கற்றாழையால் செய்தது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு இயல்பான அல்வா போல சுவையும் பார்ப்பதற்கு தோற்றமும் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த அல்வா உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியான தேகத்தை கொடுக்க வல்லது.