அரிசி மற்றும் உளுந்து என எதுவும் ஊற வைக்காமல் ஐந்தே நிமிடத்தில் பஞ்சு மாதிரியான தோசை!

வீடுகளில் பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமாக சாப்பிடும் உணவாக இட்லி மற்றும் தோசை மாறி உள்ளது. பெரும்பாலான வீடுகளில் தோசை மற்றும் இட்லி கட்டாய உணவாகவும் மாறி உள்ளது. ஆனால் சில நேரங்களில் வீட்டில் மாவு இல்லாத சமயங்களில் அதற்கு பதிலாக செய்யும் உணவுகள் சாப்பிட சுவையாக இருந்தாலும் தோசை வேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு தோசையின் மீது பிரியம் அதிகமாக உள்ளது.

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை சேர்த்து முதலில் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே அரைத்த மாவுடன் ஒரு கப் தயிர், தேவையான அளவு தண்ணீர், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக உப்பு ஒருமுறை சரிபார்த்து கூடுதலாக அரை தேக்கரண்டி சோடா உப்பு கலந்து அப்படியே ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து தோசை சுடுவதற்கு மாவு தயாராக மாறி உள்ளது. இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு நல்லெண்ணெய் தடவி சூடு படுத்தி கொள்ள வேண்டும். இதில் தோசை மாவை சேர்த்து வட்ட வடிவில் தேய்க்க வேண்டாம் அதற்கு பதிலாக அப்படியே விடலாம்.

லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கத்திரிக்காய் வறுவல் மசாலா சாதம்! ரெசிபி இதோ…

பொன்னிறமாக முன்னும் பின்னும் தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான பஞ்சு போன்ற தோசை தயார். இந்த தோசைக்கு நல்ல காரசாரமாக பூண்டு மிளகு துவையல் வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.