காலை, மாலை உணவாக தொடர்ந்து இட்லி மற்றும் தோசை சாப்பிடுபவர்களுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைக்காமல் சற்று வித்தியாசமான முறையில் சாம்பார் வைத்து சாப்பிடும் பொழுது கூடுதலாக ஒரு தோசை அல்லது இட்லி சாப்பிட வாய்ப்புள்ளது. பல மணி நேரம் அடுப்படியில் நிற்காமல் எளிமையான முறையில் சுவையான சாம்பார் அதுவும் பருப்பே இல்லாமல் சமைக்க ஆசையா இந்த ரெசிபி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க…
ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். கைவிடாமல் இரண்டு நிமிடம் வறுத்துக் கொள்ளலாம். வறுத்த இந்த கடலை மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை கடுகு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி கடலை பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்பொழுது பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் நேரத்தில் ஐந்து பல் வெள்ளை பூண்டுவை கட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை அடக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் முதலில் வறுத்து வைத்திருக்கும் கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் இந்த கலவையை ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி இறக்கினால் சுவையான கடலை மாவு சாம்பார் தயார். வீடுகளில் பருப்பு இல்லாத சமயங்களில் இது போன்ற சாம்பார் வைத்து அருமையாக அசத்தலாம்.
மேலும் நொடியின் தயாராகும் இந்த சாம்பார் இட்லி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடும் போது சிறப்பாக இருக்கும்.