சில ஹெல்த்தியான உணவுகள் சாப்பிடுவதற்கு சுவை அருமையாக இருப்பதில்லை. சுவையில் அருமையாக இருக்கும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருப்பதில்லை. இப்படி இருக்க ஹெல்தியாவும் டேஸ்டியாவும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தற்போது உள்ள அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஹெல்த்தியாவும், டேஸ்டியாகவும் இருக்கும் சிறுதானியம் வைத்து வாழைப்பூ அடை போன்று செய்யலாம் வாங்க. இதற்கான எளிமையான ரெசிபி இதுவும்.
இந்த அடை செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவு வாழைப்பூவை எடுத்து நரம்புகள் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கப் குதிரைவாலி அரிசி, 2 தேக்கரண்டி துவரம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி பாசிப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி இட்லி அரிசி சேர்த்து நன்கு கலைந்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த பருப்புடன் காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து சாய்ந்த வத்தல் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 5 மணி நேரம் கழித்து இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென அடைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வாழைப்பூவையும் சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
பந்தியில் பரிமாறப்படும் இன்ஸ்டன்டான பச்சை மாங்காய் ஊறுகாய்! ரெசிபி இதோ…
அதனுடன் துருவிய ஒரு கப் கேரட், ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் வெங்காயம், கைப்பிடி அளவு முருங்கைக்கீரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள், தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது மாவு தயார். தோசை கல்லை அடுப்பில் ஏற்றி சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து பெரிய வட்டமாக இல்லாமல் நடுத்தரமாக ஊற்றிக் கொள்ளவும். இந்த தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து சமைக்கும் பொழுது தோசை வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான சிறுதானிய வாழைப்பூ தோசை தயார். இந்த தோசையுடன் தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.