வெங்காயம் மட்டும் போதும்… இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் ஏற்ற ஒரே சைடிஷ் ரெடி!

இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் தனித்தனியாக சைடிஷ் வைக்காமல் வெங்காயம் ஒன்றை வைத்து அனைத்திற்கும் பொருந்தும் வகையில் ஒரு அருமையான தொக்கு செய்யலாம் வாங்க. இந்த தொக்கு செய்வதற்கு பத்து முதல் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும் இது செய்வதற்கு வெங்காயம் ஒன்று மட்டுமே போதுமானது.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பெரிய வெங்காயம், 10 முதல் 15 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.. அதனுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், சிறிய எலுமிச்சை பழ அளவு புளி, அதே எலுமிச்சை பல அளவிற்கு வெள்ளம் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தண்ணீர் அதிகமாக ஊற்றி அரைக்க வேண்டாம் குறைவாக ஊற்றி மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கடுகு நன்கு பொறிந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுது சேர்த்து வதக்க வேண்டும். மிதமான தீயில் தொடர்ந்து பத்து முதல் 15 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.
நாம் அரைத்து வைத்திருக்கும் பொழுதில் உள்ள தண்ணீர் பதம் பற்றி தொக்கு நன்கு கெட்டியாக மாறி வரும்.

குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! ஹெல்த்தியான முருங்கைக்கீரை பிரைட் ரைஸ்….

oniyan

இப்பொழுது தேவையான அளவு உப்பு தூவி இறக்கினால் சுவையான வெங்காய தொக்கு தயார். ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த வெங்காயத்திற்கு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் முக கச்சிதமாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றிற்கு வைத்து சாப்பிடும் பொழுது சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம். சூடான சாதத்துடன் இந்த வெங்காய தொக்கு கலந்து சாப்பிடும் பொழுது அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.