வீட்ல பைன் ஆப்பிள் இருக்கா… அப்போ ஐந்தே நிமிடத்தில் பஞ்சாபி ஸ்டைல் ஸ்வீட் செய்யலாம் வாங்க !
நம் வீடுகளில் பைன் ஆப்பிள் அதிகமாக இருக்கும் பொழுது அதை வைத்து நாம் ஜூஸ் செய்வது அல்லது அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவதும் அனைவருக்கும் பிடிக்கும். இந்த முறை சற்று மாறுதலாக பைன் ஆப்பிள் வைத்து பஞ்சாபி ஸ்டைல் பிர்னி ஸ்வீட் செய்யலாம் வாங்க…
செய்ய தேவையான பொருட்கள்
பைன் ஆப்பிள் – ஒரு கப்
கேரட் – அரை கப்
பாஸ்மதி ரைஸ் – ஒரு கப்
சர்க்கரை – மூன்று தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
காய்ச்சாத பால் – இரண்டு கப்
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை.
ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி துருவிய கேரட்டை அதில் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதில் சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து நெய்யுடன் நன்கு கிளறி கொடுக்க வேண்டும். அதன்பின் காய்ச்சாத பால் இரண்டு கப் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அம்மா கை பக்குவத்தில் வீடே மணமணக்கும் கோவில் புளியோதரை ரெசிபி இதோ!
அதன் பின் இந்த கலவையை நன்கு கலந்து பத்து முதல் 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். இப்பொழுது கேரட் மற்றும் பாஸ்மதி அரிசி இரண்டும் வேகும் அளவிற்க்கு நேரம் கொடுக்க வேண்டும்.
பாஸ்மதி அரிசி வெந்ததும் அதில் ஏலக்காய் தூள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் அன்னாச்சி பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இரண்டு மூன்று முறை கிளற வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.
மேலும் இதில் சுவைக்காக நெய்யில் வறுத்து முந்திரிகளை இறுதியாக சேர்த்துக் கொண்டால் சுவையும், வாசமும் மேலும் கூடுதலாக இருக்கும். பத்து நிமிடங்களில் தயாராகும் இந்த பஞ்சாபி ஸ்டைல் ஸ்வீட் சாப்பிடுவதற்கும் வித்தியாசமான சுவையில் தித்திப்பாக இருக்கும்.