வீட்டில் மிஞ்சும் சாதத்தில் தல தலவென வாயில் வைத்த உடன் கரையும் சுவையான அல்வா!

பொதுவாக வீட்டில் மதிய வேலைகளில் சமைக்கும் சாதம் மிஞ்சி விட்டால் அதை இரவு நேரங்களில் முட்டை சாதமாகவோ அல்லது அடுத்த நாள் பழைய சாதமாகவோ சாப்பிடுவது பழக்கம். அதிலும் சிலர் அந்த மீதம் வரும் சாதத்தை லெமன் சாதம் அல்லது புளிசாதம் என தயார் செய்து தனது விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர்.ஆனால் இப்பொழுது வீட்டில் இருக்கும் பழைய சாதம் வைத்து சுவையான அல்வா செய்யலாம் வாங்க.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நம் வீட்டில் மீதம் வந்த பழைய சாதம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு கடாயில் முக்கால் கப் வெல்லம், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கொதித்து வரும் பொழுது கட்டிகள் விழாத வகையில் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். வெல்லப் பாகின் இனிப்பு சுவையை கூடுதல் படுத்த ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

வெல்லம் நன்கு கரைந்து கெட்டியாக வரும் பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் சாதத்தை இதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். சாதம் சேர்ந்து நன்கு கொதிக்கும் பொழுது இரண்டு தேக்கரண்டி கான்பிளவர் மாவை தண்ணியுடன் கரைத்து இதில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வெங்காய கொத்தமல்லி கார தொக்கு!

இப்பொழுது வெள்ளம், அரைத்து வைத்த பழைய சாதம், கான்பிளவர் மாவு இவற்றை கட்டிகள் விழாக வண்ணம் ஒரே வாக்கில் தொடர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடம் கலந்து கொடுக்க வேண்டும்.

இதற்கிடையில் ஒரு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். இறுதியாக நெய்யில் வறுத்த பத்து முதல் 15 முந்திரி பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அல்வா தயார். தல தலவென பொன்னிறமாக பசு நெய் மண மணக்கும் வாசத்தில் சுவையான அல்வா தயாராக உள்ளது.