வித்தியாசமாக சட்னி சாப்பிட ஆசையா? சம்மர் ஸ்பெஷல் வெள்ளரிக்காய் சட்னி!

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, காரச்சட்னி பலவிதமான சட்னிகள் இருந்தாலும் இன்று புதுமையாக வெள்ளரிக்காய் வைத்து சட்னி செய்யலாம் வாங்க. கோடை காலங்களில் மலிவாக கிடைக்கும்
இந்த வெள்ளரிக்காய் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்துக்களை கொடுக்கக்கூடிய ஒரு காயாகும். இதை வாங்கி அப்படியே சாப்பிட்டு விடலாம். இல்லை சிலர் இதை வைத்து கூட்டு பொரியல் என செய்வதும் உண்டு. அப்படிப்பட்ட வெள்ளரிக்காய் வைத்து இட்லி, தோசை என அனைத்திற்கும் பொருந்தும் வகையில் சுவையான ஒரு சட்னி செய்யலாம் வாங்க… ரெசிபி இதோ!

முதலில் இரண்டு நடுத்தரமான பெரிய வெள்ளரிக்காய்களை எடுத்து கழுவி வெளியே உள்ள தோள்களை நீக்கி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

vel

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதன் பின் ஐந்து பல் வெள்ளைப் பூண்டு, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் நான்கு காய்ந்த வத்தல், பாதி எலுமிச்சை பல அளவு புலி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரிக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

திகட்டாத கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு! ரகசிய ரெசிபி!

தொடர்ந்து நான்கு நிமிடங்கள் வரை வெள்ளரிக்காவை எண்ணெயுடன் சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய எந்த பொருட்களை பத்து நிமிடங்கள் ஆரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த கலவையுடன் ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய தேங்காய், கைப்பிடி அளவு கொத்தமல்லி, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான வெள்ளரிக்காய் சட்னி தயார்.

இந்த சட்னிக்கு சிறிதளவு எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்து கிளறினால் மேலும் சுவை அருமையாக இருக்கும்.