வாய்வுத் தொல்லை பிரச்சினையா? பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத பூண்டு பொடி!

வாய்வுத் தொல்லை, மூச்சு விடும் பொழுது முதுகு மற்றும் வயிற்றில் ஓரங்களில் பிடிப்பு போல வலி ஏற்படுபவர்களுக்கு இந்த பூண்டு பொடி சிறந்த அருமருந்தாகும். இதை இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடும் பொழுது சிறந்த சைடு டிஷ் ஆகவும் இருக்கும். பல மருத்துவ பண்புகள் நிறைந்த இந்த பூண்டு வைத்து சுவையான பூண்டு பொடி செய்து சாப்பிடலாம் வாங்க.

முதலில் பூண்டு பொடி செய்வதற்கு ஒரு கப் அளவு பூண்டை நன்கு உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் முறித்து வைத்திருக்கும் வெள்ளைப் பூண்டை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேங்காய் வில் உள்ள ஈரத்தன்மை செல்லும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

po

அடுத்து இறுதியாக காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து காய்ந்த வத்தல் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்து இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டில் மாற்றி பத்து முதல் 15 நிமிடங்கள் ஆரம்பிக்க வேண்டும்.

தர்பூசணி வைத்து ஜூஸ், அல்வா மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அசத்தலான தர்பூசணி சாதம் செய்யலாம்!

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான பூண்டு பொடி தயார். இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாகவும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் விதத்திலும் மருத்துவ பண்பு நிறைந்ததாகவும் இருக்கும்.