எளிமையாக செரிமானமாகும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. அதிக சத்து நிறைந்த இந்த வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இந்த வாழைப்பழம் நம் வீடுகளில் அதிகமாக வாங்கி யாரும் சாப்பிடாமல் ஒரு ஓரமாக இருக்கும். அப்படி யாரும் கவனிக்காத அந்த வாழைப்பழம் வைத்து ஸ்வீட் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 5 முதல் 6
சர்க்கரை – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
நெய் – மூன்று தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 15
செய்முறை
முதலில் நன்கு பழத்த வாழைப்பழங்களை தோள்களை நீங்கி பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யில் வைத்து இருக்கும் வாழைப் பழத்தை சேர்த்து கிளற வேண்டும்.
மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தொடர்ந்து கிளற வேண்டும். தேவைப்படும் பொழுது நெய் சேர்த்து கிளறினால் சுவை கூடுதலாக இருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து இரண்டு தேக்கரண்டி சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும்.
இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய், வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.