லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – உடுப்பி ஸ்டைல் டேஸ்ட்டான மஸ்ரூம் புலாவ்!

ஹெல்த்தியான மஸ்ரூம் வைத்து 15 நிமிடத்தில் டேஸ்ட்டான மஸ்ரூம் புலாவ் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

தேங்காய் – அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்- அனைத்திலும் 2
மல்லி – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – இரண்டு
கசகசா – அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 2
புதினா மற்றும் கொத்தமல்லி இலை- கைப்பிடி அளவு
முந்திரி பருப்பு – 10 முதல் 15
மஸ்ரூம் – 1 கப்
பாஸ்பதி அரிசி – ஒரு கப்
உப்பு மற்றும் தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை

ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, கசகசா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

ஒரு குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் கைப்பிடி அளவு மல்லி இலை மற்றும் புதினா இலைகளை தூவி வதக்க வேண்டும். அந்த நேரத்தில் முந்திரி பருப்புகளை சேர்த்து கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கினால் போதுமானது பொன்னிறமாக வதக்க தேவையில்லை. அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

டேஸ்டான ஊத்தப்பம் சாப்பிட ஆசையா? பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தப்பம் ரெசிபி இதோ!

இப்பொழுது நாம் நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் மஸ்ரூம் சேர்த்து நன்கு எண்ணெயில் வதக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அரைமணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும்.

இரண்டு விசில்கள் வந்ததும் நமக்கு மஸ்ரூம் புலாவ் தயார். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்து சாப்பிட பரிமாறலாம்.

Exit mobile version